புராணம், பக்தி, வரலாறு.. அடடா நயன்தாராவின் அடுத்த அதகள அவதாரம்.. ரணகள வெயிட்டிங்கில் ரசிகர்கள்!
சென்னை: வெரைட்டியான படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள்.
Recommended Video
நடிகை நயன்தாரா இப்போது சிறந்த கதைகளை மட்டும் தேர்வு செய்து, நடித்து வருகிறார்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

ஶ்ரீராம ராஜ்ஜியம்
கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கில், ஶ்ரீராம ராஜ்ஜியம் என்ற புராண படத்தில் நடித்தார். அதில், நடிகர் பாலகிருஷ்ணா ராமராக நடிக்க, நயன்தாரா சீதையாக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழ், மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இளையராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பு பேசப்பட்டது.

மூக்குத்தி அம்மன்
இதையடுத்து பல படங்களில் நடித்த நயன்தாரா, மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தில் நடித்துள்ளார். இதற்காக அவர் விரதம் இருந்து நடித்துள்ளார். வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே., பாலாஜி இயக்குகிறார். இந்தப் படம் ஒடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

வரலாற்று படம்
இதையடுத்து வரலாற்று படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபல கன்னட ஹீரோ தர்ஷன் நடிக்கும் படம், வீர மடகாரி நாயகா. கர்நாடகாவின் சித்ரதுர்கா பகுதியை, ஒரு காலத்தில் ஆட்சி செய்த மன்னரின் கதையான இந்தப் படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். ராஜேந்திர சிங் பாபு இயக்குகிறார்.

திவ்யா ஸ்பந்தனா
இதில் நடிக்க கன்னட நடிகையான ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனாவை கேட்டனர். அவர் இதுவரை நடிக்கிறேன் என்றும் இல்லை என்றும் பதில் சொல்லவில்லை. இதையடுத்து நடிகை நயன்தாராவை அந்த கேரக்டரில் நடிக்க பேசியுள்ளனர். அவர் நடித்தால் மற்ற மொழிகளிலும் படத்தை வெளியிடலாம் என்பது படக்குழுவின் திட்டமாம்.

ராக்லைன் வெங்கடேஷ்
நடிகை சுமலதா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஹம்சலேகா இசை அமைக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் இதன் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா ஏற்கனவே உபேந்திரா ஜோடியாக ஒய் என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











