ஹீரோயின் ரெடி.. லொகேஷன் ரெடி.. பிக் பாஸ் முடிஞ்சா இந்தியன் 2 ஆரம்பிச்சுடுவாங்களாம்..!
இந்தியன் 2 படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
Recommended Video

சென்னை: கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியின் மிகப்பெரிய வெற்றிப்படமான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தயாராக உள்ளது. நீண்ட நாட்களாக பேசிக்கொண்டிருந்த இந்த பட வேலைகளை ஆரம்பிக்க இப்போதுதான் சரியான நேரம் கைகூடியுள்ளது.

சமீபத்தில் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் லொகேஷன் பார்க்கும் புகைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கதாநாயகி யார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கமலுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா, ரஜினி, அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என எல்லா முன்னனி நாயகர்களுடனும் நடித்துவிட்டார். கமலுடன் நடிக்கவில்லை என்ற குறையும், கமலுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் இப்படத்தின் மூலம் நிறைவேறப்போகிறது.
இந்தியன் 2 திரைப்படத்திற்காக ஒரு பெரிய தொகையை லைகா புரடக்ஷன்ஸ் நயன்தாராவுக்கு முன்பணமாக கொடுத்துள்ளதாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











