ஹிட்டடித்த “லேடி சூப்பர் ஸ்டார்“ நிகழ்ச்சி… குஷியில் ஆட்டம் போட்ட டிடி !

சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இதுவரை எந்த சேனலுக்கும் பேட்டி கொடுத்தது இல்லை. அதேபோல படத்தின் புரமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார்.

நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில், கலந்து கொண்ட நயன்தாரா மனம் திறந்து சுவாரசியமான பல கேள்விகளுக்கு பதிலளித்து இருந்தார்.

இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது, இதனால், டிடி குஷியில் செமயா ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

நெற்றிக்கண்

நெற்றிக்கண்

ஹாட் ஸ்டாரில் வெளியான நெற்றிக்கண் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தார். அதனால் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பல ரசிகர்களும் இத்தனை வருடமாக பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்திற்கு மட்டும் ஏன் புரோமோஷன் செய்யவேண்டும். இவர்கள் படம் தயாரித்துள்ளதால் ப்ரோமோஷனில் கலந்துகொண்டுள்ளார் என்று கருத்துக்கள் உலா வந்தன.

நிச்சயம் முடிந்தது

நிச்சயம் முடிந்தது

படத்தின் புரமோஷனுக்காக கலந்துகொண்ட நயன்தாராவிடம் டிடி பல கேள்விகளை முன்வைத்தார். மோதிர விரலால் ஒரு பிரளயமே நடந்தது அதற்கு என்ன காரணம் என கேட்டார். அதற்கு நயன்தாரா நானும் விக்னேஷ் சிவனும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் இது ஒரு சில குடும்ப நண்பருக்கு மட்டும் தெரியும் என கூறினார்.

டிடி அடுக்கடுக்கான கேள்வி

டிடி அடுக்கடுக்கான கேள்வி

மேலும், விக்னேஷ் சிவனுடன் உள்ள உறவு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா? அல்லது திருமணமா? என்றும், அரசியலுக்கு வருவீர்களா? என்றும், பத்திரிகையாளர்களுக்கு ஏன் பேட்டி கொடுப்பதில்லை என்றும், உங்களுக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்து நீங்கள் வாழ்க்கையில் பின்னோக்கி சென்றால் நீங்கள் எதை மாற்றுவீர்கள் என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு அசத்தினார் டிடி.

எல்லாமே பிடிக்கும்

எல்லாமே பிடிக்கும்

இதற்கு பதிலளித்த நயன்தாரா, நாம் யாரை விரும்புகிறோம் என்பதுதான் முக்கியம். அவர் நம்மை எப்படிப் பார்த்துக் கொள்கிறார்? நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்? நாம் அவர்களுடன் இருக்கும்போது எவ்வாறு உணர்கிறோம்? இவையெல்லாம்தான் முக்கியம் என்றார். மேலும், விக்னேஷிடம் எனக்கு எல்லாமே பிடிக்கும். குறிப்பிட்டு இதுதான் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடியாது.

அதிக படங்களில் நடிக்கிறேன்

அதிக படங்களில் நடிக்கிறேன்

இதுவரை நான் பார்த்த ஆண்கள் அனைவருமே நாம் செய்யும் வேலையையும், முன்னேற்றத்தைத் தடுக்க முயல்வார்கள். ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், பெண்களால், குடும்பம், குழந்தைகள், வேலை அனைத்தையும் கவனிக்க முடியும் என்றார். விக்னேஷ் என் வாழ்க்கையில் வந்தபிறகுதான் நான் அதிகமாகப் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறேன் என்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

டிடி குஷியில் போட்ட ஆட்டம்

டிடி குஷியில் போட்ட ஆட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரில் கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சி சுதந்திர தினத்தன்று வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றதோடு செம்ம ஹிட்டடித்தது. எங்கு பார்த்தாலும், இந்த நிகழ்ச்சி பற்றிதான் பேச்சாக இருந்தது. இதனால், ஏகத்திற்கும் குஷியான திவ்ய தர்ஷினி குஷியில் செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த ஆட்டமும் தற்போது டிரெண்டித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X