Nayanthara: இந்த க்ரீமை தடவினால் வயசே ஆகாதா.. நயன்தாராவின் புதிய தொழில்.. விளம்பரம் வந்துடுச்சு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளம்பர படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்கிற முடிவுடன் உள்ள நிலையில், லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது புதிதாக சொந்த நிறுவனத்தை தொடங்கி அதன் விளம்பரப் படத்திலேயே நடித்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெண்களின் சருமத்தை பாதுகாக்கும் புதிய லோஷன் நிறுவனமான 9ஸ்கின் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கியுள்ளார். வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி அந்த நிறுவனம் லான்ச் ஆக உள்ள நிலையில் தற்போது அதன் விளம்பர படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Nayanthara introducing her own anti ageing skin lotion product now

முதல் படமே 1000 கோடி: ஜவான் படத்தில் கூட இத்தனை கவர்ச்சிகரமாக நயன்தாரா நடித்தது இல்லையே என ரசிகர்கள் வாயைத் திறந்து பார்க்கும் அளவுக்கு படு கவர்ச்சியாக தனது புதிய நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா தனது முதல் இந்தி திரைப்படமே 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய சந்தோசத்தில் நாடு முழுவதும் புதிய தொழிலின் வியாபாரத்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara introducing her own anti ageing skin lotion product now

நயன்தாராவின் புதிய தொழில்: வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் நயன்தாராவின் புதிய தொழில் 9ஸ்கின் லோஷன் விளம்பரத்தில் Anti Ageing lotion எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கின் கேர் லோஷனை தடவி வந்தால் வயசே ஆகாதா? அது என்ன ஆன்ட்டி ஏஜிங்? என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நயன்தாராவின் ரசிகர்கள் மார்க்கெட்டுக்கு புதிய அழகு சாதனப் பொருள் எப்போது கிடைக்கும் என்கிற கேள்வியை எழுப்பி உள்ள நிலையில் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த ப்ராடக்ட் மூன்று நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் கையில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

லேட்டஸ்ட் விளம்பரம் இதோ: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்த நிலையில், ஜவான் படத்துக்கு விளம்பரம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து தனது அழகு சாதன பொருள் குறித்த விளம்பரங்களை செய்து வருகிறார்.

நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் விளம்பர வீடியோவை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இந்த வாரம் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள இறைவன் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X