போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடுகட்டும் நயன்தாரா.. இண்டீரியருக்கு மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : நடிகை நயன்தாரா போயஸ் கார்டன் பகுதியில் பிரம்மாண்டமாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் இண்டீரியர் வேலைக்காக அவர் செலவு செய்துள்ள தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் கொழுக் மொழுக்குன்னு வந்து க்யூட்டாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நயன்தாரா. முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சுக்கு பிடித்து போனதால், அடுத்தடுத்து தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இமைக்கா நொடிகள், வாசுகி,அறம்,மாயா,ஐரா, டோரா, நெற்றிக்கண் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்ட்ட நயன்தாரா, மக்கள் மனதில் சிம்மானத்தில் அமர்ந்துள்ளார்.

நயன் விக்கி திருமணம்

நயன் விக்கி திருமணம்

விக்னேஷ் சிவனின் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து, 6 ஆண்டுகள் காதல் ஜோடியாக சுற்றி வந்த இவர்கள் கடந்த மாதம் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு மிகவும் முக்கியமான விவிஐபிக்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

திருமணம் முடித்ததை அடுத்து புதுமண தம்பதிகள் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் மஞ்சள் கயிறுடன் க்யூட்டாக இருக்கும் நயன்தாவை பார்த்து அனைவரும் ரசித்துப்பார்த்தனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

போயஸ் கார்டனில் பிரம்மாண்ட

போயஸ் கார்டனில் பிரம்மாண்ட

ஹனிமூனை முடித்துவிட்டு திரும்பியுள்ள நயன் விக்னேஷ் சிவன் தம்பதியர் அடுத்து தங்களது சினிமா வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர். இதற்கு மத்தியில் நயன்தாரா போயஸ் கார்டனில் வீடுவாங்கி உள்ளார். அந்த வீட்டின் இண்டீரியர் டிசைன் வேலைகளை செய்ய மும்பையிலிருந்து ஒரு சிறப்பு குழுவினை வரவழைத்துள்ளார் நயன்தாரா. இந்த உள் அலங்கார வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இண்டீரியர் டிசைன்

இண்டீரியர் டிசைன்

16 ஆயிரத்து 500 சதுர அடியில் தயாராகும் நயன்தாராவின் கனவு இல்லத்தில் அதிநவீன ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயார் செய்து வருகின்றனர். பாத்ரூமின் அளவு மட்டும் 1500 சதுர அடியாம். இந்த இண்டீரியர் வேலைகளுக்காக மட்டும் செய்யப்படும் செலவு மட்டுமே 25 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Director Hari | Thalapathy Vijay க்கு கத சொல்லிருக்கேன் சீக்கிரம் நடக்கும் | Yaanai | *Interview
ஒரு கோடிப்பு… ஒரு கோடி

ஒரு கோடிப்பு… ஒரு கோடி

இந்த பிரம்மாண்ட வீட்டை நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்காக திருமண பரிசாக வழங்கியிருந்தார். அந்த வீடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்தினம், தனுஷ் போன்றோர் குடியிருக்கும் போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. அலங்காரத்திற்கு மட்டும் 25 கோடி என கேள்வி பட்ட ரசிகர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரி பேசும் வசனத்தை பேசி ஒரு கோடிப்பு... ஒரு கோடி என வாயை பிளந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X