அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதா? தொழிலை பார்ப்பதா? குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தனது அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் திருமண விவகாரத்தில் நடிகை நயன்தாரா பெரும் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், கைதி 2 படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம் குறித்தும் கூறியுள்ளார் பிகே.
Recommended Video
இதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விஜயகுமாரின் காட்சிகள் மற்றொரு நடிகருக்கு கொடுக்கப்பட்டது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் எஸ்43 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.
இதேபோல் அன்புள்ள கில்லி படத்தின் ட்ரெயிலர் மற்றும் படத்தில் நடிக்கும் நாய்க்கு டப்பிங் கொடுத்த சூரி குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது. மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதா அல்லது கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொடுப்பதா என நடிகை நயன்தாரா குழப்பத்தில் உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











