அமெரிக்கா போயும் விரதம் இருக்கும் நயன்.. யாருக்காகத் தெரியுமா?

மூக்குத்தி அம்மனுக்காக விரதம் இருக்கிறாராம் நயன்தாரா.

Recommended Video

Nayanthara Birthday Surprise| Mookuthi Amman | Vignesh Shivan

சென்னை : மூக்குத்தி அம்மன் படத்துக்காக நடிகை நயன்தாரா விரதம் இருந்து வருகிறாராம்.

தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா தனது பிறந்தநாளைக் காதலர் விக்கியுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார். மீண்டும் சென்னை திரும்பியதும் விக்கி தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

அதோடு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நாயகனாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அம்மன் வேடம்

அம்மன் வேடம்

இப்படத்தில் நயன் அம்மனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தனது திரையுலக வாழ்க்கையில் நயன் சீதையாகக் கூட நடித்துள்ளார். ஆனால் அம்மனாக நடிப்பது இதுவே முதல்முறை. எனவே அந்த வேடத்துக்காக அவர் விரதம் இருக்கிறாராம்.

பூஜை

பூஜை

கன்னியாகுமரி அம்மனைத் தான் மூக்குத்தி அம்மன் என அழைப்பார்கள். எனவே அங்கு சென்று படத்திற்கு பூஜையை போட்டு படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் வரும் அம்மன் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன் சம்பளம்

நயன் சம்பளம்

மூக்குத்தி அம்மனுக்காக நயனுக்கு ரூ. 7 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் வாங்கியதிலேயே இது தான் அதிக சம்பளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இப்படம் சாமி படம் இல்லை, சமூக கருத்து சொல்லும் படம் எனக் கூறப்பட்டது.

முக்கிய கதாபாத்திரம்

முக்கிய கதாபாத்திரம்

தற்போது இது சாமிப்படம் தான் என்றும், நயன் அம்மனாக நடிப்பதும் தெரிய வந்துள்ளது. படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நயன் நடிக்கவில்லை. அவரது கதாபாத்திரம் முக்கியமானது என்பதால் அதில் நடிக்க சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X