'லேடி சூப்பர் ஸ்டார்' யார்? நயன்தாராவை வம்பு இழுத்த நடிகை கஸ்தூரி!
சென்னை: சூப்பர் ஸ்டார் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் யார் என்று புது சர்ச்சையை நடிகை கஸ்தூரி கிளப்பி உள்ளார்.
சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என அனைத்திலும் புகுந்து விளையாடுவார்.

சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அப்பேட்டுகளை பகிர்ந்து சோஷியல் மீடியாவில் எப்போதும் பிஸியாக இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
நடிகை கஸ்தூரி: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கஸ்தூரி கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
கலக்கல் ஆட்டம்: தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ள கஸ்தூரி, குத்துவிளக்கு குத்துவிளக்கு பாடலுக்கு கலக்கலாக குத்தாட்டம் போட்டிருந்தார். இவர் போட்ட ஆட்டம் இன்று வரை உச்சுக்கொட்ட வைத்துள்ளது. தற்போது இவர், டிவி சீரியல்களில் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
லேடி சூப்பர் ஸ்டார்' யார்? அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, நடிகை நயன்தாராவை வம்பு இழுக்கும் வகையில் பேசி உள்ளார். அதில், தென்னிந்திய சினிமாவில், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அங்கீகரிக்க முடியாது. என்னை பொறுத்தவரையில் நடிகைகளில் லேடி சூப்பர் ஸ்டார்' யார்? என்று கேட்டால் பழம்பெரும் நடிகைகள் கே.பி.சுந்தராம்பாள், விஜயசாந்தி போன்றவர்கள் தான் என்று கஸ்தூரி கூறியிருந்தார்.
ரசிகர்கள் அதிருப்தி: நடிகை கஸ்தூரியின் இந்த கருத்து நயன்தாரா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. நயன்தாராவின் ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொண்டனர். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவந்த நிலையில், நடிகை கஸ்தூரி பிரச்சனையை கிளப்பினார்.
வெடித்த பிரச்சனை: அவர் தனது ட்விட்டரில், மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்த சட்டம். அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம் என பதிவிட்டு இருந்தார். கஸ்தூரி வாடகைத்தாய் விவகாரத்தை கிளப்பிய பிறகே, இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.


Click it and Unblock the Notifications











