அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்த நயன்தாரா

By Siva

சென்னை: அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்த நயன்தாராவை கோலிவுட்காரர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் கஷ்யப் உள்ளிட்டோர் நடித்த இமைக்கா நொடிகள் படம் கடந்த மாதம் 30ம் தேதி வெளியானது.

கே.டி.எம். பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்தானது.

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள்

கே.டி.எம். பிரச்சனையால் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸாகவில்லை. பல்வேறு இடங்களில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தியேட்டருக்கு சென்ற பிறகே காட்சிகள் ரத்தானது தெரிய வந்து கோபப்பட்டனர். நிதி பிரச்சனையால் ரிலீஸில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து மறுநாள் அனைத்து இடங்களிலும் படத்தை ரிலீஸ் செய்தனர்.

நயன்தாரா

நயன்தாரா

இமைக்கா நொடிகள் ரிலீஸின்போது தயாரிப்பாளருக்கு நிதி பிரச்சனை ஏற்பட்டது. நயன்தாராவுக்கு ரூ. 50 லட்சம் சம்பள பாக்கி வைத்திருந்தார்கள். தயாரிப்பாளரின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்டு சம்பள பாக்கியை அந்த நேரத்தில் கேட்டு தொல்லை செய்யாமல் விட்டுக் கொடுத்தாராம் நயன்தாரா. நயன்தாரா மட்டும் சம்பள பாக்கியை செட்டில் செய்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறியிருந்தால் தயாரிப்பாளரின் நிலைமை படுமோசமாகியிருக்கும்.

நடிகை

நடிகை

சம்பள பாக்கியை பெரிதாக நினைக்காத நயன்தாரா பற்றி கோலிவுட்காரர்கள் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுப்பதால் நயன்தாரா சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்பது தனிக் கதை. சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை வைத்து படம் எடுக்கும் தாயரிப்பாளருக்கு பிரச்சனை என்றால் விட்டுக் கொடுக்கிறார் நயன்தாரா.

வசூல்

வசூல்

கோலமாவு கோகிலா ஹிட்டாகியுள்ள நிலையில் இமைக்கா நொடிகள் படமும் தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா என்று இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் நயன்தாரா படம் என்று தான் ரசிகர்கள் சொல்கிறார்கள். இமைக்கா நொடிகள் படத்தில் முதலில் மம்மூட்டி நடிப்பதாக இருந்தது. பின்னர் கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டதால் நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை நடிக்க வைத்திருக்கிறார் அஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X