சூர்யாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா?
சென்னை: சூர்யாவுடன் மீண்டும் நயன்தாரா ஜோடி சேர்கிறார் நயன்தாரா, வெங்கட் பிரபு இயக்கும் படத்தில்!
லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தைக் கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா. சில பேட்ச் அப் காட்சிகள் மட்டும்தான் பாக்கியுள்ளன.
இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம்.

ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் 'பூஜை' படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு நடிகையைத் தேடியவர்களுக்கு, நயன்தாரா பொருத்தமான சாய்ஸாகத் தெரிந்தாராம்.
எனவே நயன்தாராவையே சூர்யாவிற்கு ஜோடி சேர்க்க முடிவு செய்துள்ளனர்.
இதற்குமுன் 'கஜினி' படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'ஆதவன்' படத்திலும் சூர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர்.
நயன்தாரா இப்போது ஜெயம் ரவியுடன் ஒரு படம், உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











