பெரிய கவுரவம்: ஸ்வீட் எடுத்து, கொண்டாடும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
Recommended Video
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு ட்ரீட் கொடுக்கும்படி நல்ல விஷயம் நடந்துள்ளது.
நயன்தாரா படங்களில் நடிப்பதுடன் நின்றுவிடாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தன்னைத் தேடி வரும் விளம்பர பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்பது இல்லை அவர்.
குறிப்பிட்ட பிராண்டுகளின் விளம்பரங்களில் மட்டுமே நடிக்கிறார்.

தனிஷ்க்
டாடா நிறுவனத்தின் தனிஷ்க் நகை பிராண்டின் தென்னிந்திய விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் நயன்தாரா. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நீண்ட நாட்களாக தனிஷ்க் பிராண்டு அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா
தென்னிந்திய சந்தையின் பிராண்டு அம்பாசிடராக நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. தனிஷ்க்கிற்கு தென்னிந்திய சந்தை மிகவும் முக்கியமானது. இங்கு புதுக் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். தெற்கு பகுதியில் நயன்தாரா மிகவும் பிரபலமானவர் என்பதால் எங்கள் பிராண்டுக்கு ஏற்றவர் என்று டைட்டன் ஜூவல்லரியின் விளம்பர பிரிவு அதிகாரி தீபிகா திவாரி தெரிவித்துள்ளார்.

அட்சய திருதியை
அட்சய திருதியையில் இருந்து தனிஷ்க் விளம்பரங்கள், போஸ்டர்களில் நயன்தாரா இடம் பெறுவாராம். தனிஷ்க் போன்ற ஒரு பெரிய பிராண்டின் அம்பாசிடரானதில் நயன்தாரா பெருமை அடைந்துள்ளார். தனிஷ்க் விளம்பரத்தில் நடிப்பதை நடிகைகள் கவுரவமாக கருதும் நிலையில் அந்த கவுரவம் நயனுக்கு கிடைத்துள்ளது.

படங்கள்
நயன்தாரா படங்களை போன்றே விளம்பர படங்களிலும் நடிக்க கூடுதல் சம்பளம் வாங்குகிறார். தனிஷ்க் பெரிய பிராண்டு என்பதால் நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுப்பதில் அவர்களுக்கு பிரச்சனை இல்லை.


Click it and Unblock the Notifications











