Nayanthara - தனுஷின் இந்தப் படத்தில் நயன்தாரா நடித்திருக்க வேண்டியதா?.. வெளியான தகவல்
சென்னை: Nayanthara (நயன்தாரா) தனுஷின் சூப்பர் ஹிட் படம் ஒன்றை நயன்தாரா தவறவிட்ட விஷயம் தெரியவந்திருக்கிறது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

காதல் சர்ச்சைகள்: இந்தச் சூழலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்டார். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் முடிந்தது. இந்த இரண்டு காதல் முறிவுகளையும் வைத்து நயன்தாராவை தனிப்பட்ட முறையில் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் நயன் அதை காதல் போட்டுக்கொள்ளாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் நயன். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல் ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் அட்டகாசமாக இருப்பதால் கண்டிப்பாக ஜவான் ஹிட்டடித்துவிடும் என்ற நம்பிக்கை அவரிடமும், அவரது ரசிகர்களிடமும் இருக்கிறது. அதன் காரணமாக நயன் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
தவறவிட்ட படம்: இந்நிலையில் தனுஷ் படம் ஒன்றை நயன்தாரா தவறவிட்டதாக கூறப்படுகிறது. மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் திருச்சிற்றம்பலம். பல காலம் வெற்றியே கொடுக்காத தனுஷுக்கு அந்த படம் பெரும் ரிலீஃபாக இருந்தது. படம் ஃபீல்குட்டாக இருக்கிறது என்று விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நயன் தாராவிடம்தான் பேசப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கேள்விப்பட்ட நயனின் ரசிகர்கள்; ஏற்கனவே யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷுக்கும், நயனுக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இதிலும் அவர் நடித்திருந்தால் இன்னமும் அட்டகாசமாக இருந்திருக்கும் என கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











