ஏனுங்க நயன், விக்கி மறுபடியுமா?: இவங்க வேற ரொம்ப டார்ச்சர் பண்றாங்களே
Recommended Video

சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.
நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தனது காதலரான விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு கிளம்பிவிடுகிறார். வெளிநாடு என்றால் கூட்டம் கூடாது அவர்கள் நிம்மதியாக வெளியே செல்லலாம்.
அந்த காரணத்தால் தான் அடிக்கடி வெளிநாட்டிற்கு கிளம்பிவிடுகிறார்கள்.
நயன்தாரா
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள செல்சி டவருக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட நயன்தாராவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஓவியம்
ஒரு ஓவியமே இன்னொரு ஓவியத்துடன் நிற்கிறதே அடடே ஆச்சரியக்குறி
புன்னகை மன்னன்
விக்னேஷ் சிவன் அமெரிக்காவுக்கு சென்ற இடத்தில் பியானோவில் புன்னகை மன்னன் தீம் மியூசிக்கை வாசித்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா
புத்தாண்டை கொண்டாட அமெரிக்கா சென்றார்கள் விக்கியும், நயனும். இந்நிலையில் ஜனவரி மாதம் முடிவதற்குள் அவர்கள் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று புகைப்படங்கள் வெளியிடுவதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பாகிறார்கள். விக்கிக்கு மட்டும் எப்படி ஒர்க்அவுட் ஆகிறது என்று கேட்கிறார்கள். இவர் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றார்யா என்று வடிவேலு வசனத்தை சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











