»   »  நயன்தாராவை பெண்ணாகவே பார்க்க முடியாது: வேல ராமமூர்த்தி

நயன்தாராவை பெண்ணாகவே பார்க்க முடியாது: வேல ராமமூர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் ஹீரோயின்களில் நயன்தாராவிடம் நான்கு ஆண்களின் கம்பீரம் இருக்கும். அவரை பெண்ணாகவே பார்க்க முடியாது. அவரிடம் அப்படி ஒரு தெளிவு, கம்பீரம் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் வேல ராமமூர்த்தி தற்போது கோலிவுட்டின் பிசியான அப்பா நடிகர். சில படங்களில் வில்லனாகவும் வருகிறார். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து அவர் செய்தி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தனுஷ்

தனுஷ்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தேனி ஏரியாவில் மாஸான ஆளாக நடித்துள்ளேன். என் பையன் தனுஷ். ரொம்ப ஜாலியான அப்பா நான். தனுஷ் தனது காதலியை முதல்முதலாக வீட்டிற்கு அழைத்து வரும்போது அந்த பெண்ணை கை கொடுத்து வரவேற்கும் அப்பா நான். ஜீன்ஸ் டி-சர்ட் அணியும் மாடர்ன் அப்பா நான்.

விக்ரம்

விக்ரம்

விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்கிறேன். என் மூத்த மகன் எனக்கு பிடிக்காத மகன் அவர். படப்பிடிப்பின் முதல் நாள் நான் செட்டுக்கு சென்றேன். அவரை தெரியாது என்பதால் நான் பாட்டுக்கு காட்சிக்கு ரெடியாக வந்தேன்.

அப்பா

அப்பா

விக்ரமோ செட்டில் என்னை பார்த்தவுடன் தானாக வந்து ஹாய் சொல்லி பேசினார். அப்பா, அம்மாவை தேர்வு செய்ய முடியாது. ஆனால் இந்த படத்தில் நான் தான் என் அப்பாவை தேர்வு செய்தேன். கோபக்கார எழுத்தாளர் தான் என் அப்பாவாக வேண்டும் என்று கேட்டேன் என விக்ரம் என்னிடம் தெரிவித்தார்.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ் ஹீரோயின்களில் நயன்தாராவிடம் நான்கு ஆண்களின் கம்பீரம் இருக்கும். அவரை பெண்ணாகவே பார்க்க முடியாது. அவரிடம் அப்படி ஒரு தெளிவு, கம்பீரம். மிகச் சிறந்த பெண் கலைஞர் நயன்தாரா.

அரசியல்

அரசியல்

அரசியல் இன்னைக்கு தானா உருக்குலைந்து போனது? சுதந்திரத்திற்கு பிறகே உருக்குலைந்துவிட்டது. இந்தியா முழுவதும் மக்கள் விரோத அரசியல் ஜேஜேன்னு உரம் போட்டு வளர்ந்து வருகிறது. அந்த மோசமான அரசியல் சூழலில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராடியது, டெல்லியில் விவசாயிகள் போராடியதை பார்க்க பார்க்க சந்தோஷமாக உள்ளது. இந்த சக்திக்கு பெரிய வேலை, கடமை உள்ளது. இந்தியர்கள் அனைவரும் அந்த மோசமான சக்திக்கு எதிராக திரளணும் என்றார் வேல ராமமூர்த்தி.

English summary
Writer cum actor Vela Ramamoorthy said that among the tamil heroines Nayanthara is very majestic.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil