நயன்தாரான்னா மட்டும் தான் பொங்குவீங்களா?: சித்தார்த்

By Siva

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: நயன்தாரா விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் போட்ட ட்வீட்டுகள் நியாயமாக உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

கொலையுதிர் காலம் பட விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாராவை தரக்குறைவாக பேசியதை பார்த்து பலரும் பொங்கியுள்ளனர். தனது காதலிக்கு ஆதரவாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் இது தொடர்பாக தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்

சித்தார்த்

மீ டூ குறித்து அமைதியாக இருக்கும் அதிகாரம் படைத்த எந்த பெண்ணும் அந்த இயக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்ட ஆண்களை போன்றே குற்றவாளிகளே. ஆண், பெண் என்று பாராமல் செயல்பட வேண்டும் என்று சித்தார்த் ட்வீட் செய்தார். அதை பார்த்தவர்கள் அவர் நயன்தாராவை தான் சொல்கிறார் என்றார்கள்.

விக்னேஷ் சிவன்

சித்தார்த்தின் ட்வீட்டை பார்த்த விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் அமைதியாக இருப்பதால் ஆதரவளிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நயன்தாரா பெண்களின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக குரல் கொடுப்பவர். பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது படங்களில் பேசியுள்ளார். அது ட்விட்டரை விட அதிகம் பேரை சென்றடையும் என்று பதில் அளித்துள்ளார். நயன்தாரா சத்தமில்லாமல் பல நல்ல விஷயங்களை செய்வதாக கூறுகிறார் விக்கி.

திரையுலகம்

மீ டூ இயக்கம் பற்றி கண்டு கொள்ளாத திரையுலகினர் தற்போது நயன்தாராவுக்காக பொங்குவதை பார்த்து சித்தார்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். நம்மில் ஒருவர் பாதிக்கப்படும் போது மட்டுமே பேசுவோம் என்பது வீரம் அல்ல என்கிறார் சித்தார்த்.

விமர்சனம்

ராதாரவி பிற பெண்களை விமர்சித்தபோது இவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராதாரவி

பாடகி சின்மயி ராதாரவி மீது புகார் தெரிவித்தபோது பலரும் அவரை தான் விளாசினார்கள். ராதாரவியை யாருமே குறை கூறவில்லை. இந்நிலையில் அவர் நயன்தாராவை பற்றி பேசிய உடன் அனைவரும் அவரை திட்டுகிறார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X