இடியட், மூளையில்லாத முட்டாள்: ராதாரவியை விளாசிய ஸ்ரீரெட்டி
சென்னை: நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவியை விளாசியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசினார். இதற்கு நயன்தாரா கடும் கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் ராதாரவியை கண்டித்துள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி ராதாரவியை திட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தாமதமாக போஸ்ட் போடுவதற்கு சாரி நயன் மேடம். நான் வேறு வேலையில் இருந்தேன். இந்த ராதாரவி என்ன கருமத்தை பேசுகிறார்.. ஒரு பெண் சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடாதா...அவர் எவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்...ரவி இடியட் உங்களை நினைத்து வெட்கமாக உள்ளது.
வயதாகி என்ன பயன் மூளையில்லாத முட்டாள்..ஹீரோயின்கள் என்றால் அவர்களின் கேரக்டர் சீப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? து...சீக்கிரம் இறந்துவிடுங்கள்...திமுக எடுத்த முடிவை வரவேற்கிறேன்...நயன்தாராவை ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.


Click it and Unblock the Notifications











