கொரோனாவுக்கு பிறகு படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை நயன்தாரா.. வைரலாகும் கடற்கரை போட்டோஸ்!

By

கொச்சி: கொரோனாவுக்கு நடிகை நயன்தாரா சினிமா படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மவுலி, ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ரெண்டு காதல்

ரெண்டு காதல்

வேல்ஸ், ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜியும் இயக்கி உள்ளார். படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடிக்க இருக்கிறார்.

த்ரில்லர் நிழல்

த்ரில்லர் நிழல்

கொரோனா காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார், நயன்தாரா. இந்நிலையில், மலையாளத்தில் உருவாகும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார், நயன் தாரா.

சமீபத்தில் இணைந்தார்

சமீபத்தில் இணைந்தார்

இதில் ஹீரோவாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்கும் இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதன் ஷூட்டிங்கில் சமீபத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா. குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் டிவென்டி 20 படத்தில் சின்ன காட்சியில் நடித்திருந்தனர்.

பெயரைச் சொன்னேன்

பெயரைச் சொன்னேன்

12 வருடங்களுக்குப் பிறகு இப்போது இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். 'இந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளது. பல நடிகைகளை தேடினோம். நான்தான் நயன்தாராவை பெயரைச் சொன்னேன் என்று கூறியிருந்தார் குஞ்சாக்கோ போபன்.

பீச்சில் நயன்தாரா

பீச்சில் நயன்தாரா

இந்நிலையில், இதன் ஷூட்டிங்கில் நடிகை நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. அந்தப் புகைப்படத்தில் நயன்தாராவும் குஞ்சாக்கோவும் பீச்சில் நிற்கின்றனர். சிலர் அவர்களை வேடிக்கை பார்க்கின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu
லவ் ஆக்‌ஷன் டிராமா

லவ் ஆக்‌ஷன் டிராமா

மலையாளம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நயன்தாரா, மலையாளத்தில் கடைசியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடித்திருந்தார். தியான் சீனிவாசன் இயக்கி இருந்த இந்தப் படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X