»   »  தானா சேர்ந்த கூட்டத்தில் நயன்தாராவை நைசா சேர்த்துவிட்ட விக்னேஷ் சிவன்

தானா சேர்ந்த கூட்டத்தில் நயன்தாராவை நைசா சேர்த்துவிட்ட விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

தனது காதலர் விக்னேஷ் சிவனை பெரிய இயக்குனர் ஆக்கிப் பார்க்க ஆசைப்படுகிறார் நயன்தாரா. இதில் முதல்கட்டமாக அவர் பெரிய ஹீரோவின் படத்தை இயக்க நயன்தாரா உதவி செய்துள்ளார்.

Nayanthara joins Vignesh Shivan's Thaana Serntha Koottam

அஜீத்தை வைத்து விக்கி படம் இயக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து சூர்யாவை அணுகி விக்கி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தார் நயன்.

விக்கி, சூர்யா இணையும் படத்திற்கு தானா சேர்ந்த கூட்டம் என பெயரிட்டுள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் வருகிறாராம்.

சிறப்புத் தோற்றம் என்றாலும் நயனுக்கு முக்கிய கதாபாத்திரமாம். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் நயன் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nayanthara has joined alleged boy friend Vignesh Shivan's Thaana Serntha Koottam starring Suriya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil