Nayanthara -Kavin combo: கவின் -நயன்தாரா நெருக்கமான புகைப்படம்.. டைரக்டர் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகை நயன்தாரா, கவினுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் கவின், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

வயதில் சிறியவரான கவினுடன் இந்தப் படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார். இநத்ப் படத்தின் கதைக்களமும் அப்படியே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வயதில் சிறியவன், தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணை காதலிப்பதாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara Kavin Vishnu edavan

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தன்னுடைய சினிமா கேரியரை சிறப்பாக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லாமல் கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டிலும் களமிறங்கினார் நயன்தாரா. கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் 1000 கோடி கிளப்பில் இணைந்து பாலிவுட்டில் நயன்தாராவின் என்ட்ரியை மாஸாக்கியது. அட்லி இயக்கத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் மாஸாக ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக நயன்தாரா தமிழில் மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா -கவின் ஜோடி: இதனிடையே அடுத்ததாக நடிகர் கவினுடன் இணைந்து 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் அடுத்தப்படத்தில் நயன்தாரா கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை நயன்தாரா மற்றும் கவின் நெருக்கமாக உள்ள புகைப்படத்துடன் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை நடிகர் கவின், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விஷ்ணு எடவன் ஆகியோர் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும் இயக்குநர் விஷ்ணு எடவன் இந்தப் படம் குறித்து தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் அப்டேட்: இன்றைய தினம் இந்தப்படத்தின் பயணம் துவங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள விஷ்ணு எடவன், நயன்தாரா, கவின் மற்றும் தயாரிப்பாளர் லலித் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்டவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் நயன்தாராவும் கவினும் மிகவும் நெருக்கமாக காணப்படுகின்றனர். தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் இளைஞனை பற்றிய கதையாக இந்தப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் கவின்: நடிகர் கவின் லிப்ட் படத்தின்மூலம் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்ற லையில், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்த படங்களின்மூலம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளார். இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் ாஸ்க் என்ற படத்திலும் நடித்து வருகிறார் கவின். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா வில்லியாக நடித்து வருகிறார். இதேபோல பிளடி பெக்கர், கிஸ் படங்களிலும் கவின் நடித்து வருகிறார். இதனிடையே நயன்தாராவும் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X