கிழிந்த பேண்ட்.. தொளதொள ஷர்ட்.. அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைத்ராபாத்தில் லேண்டான நயன்!#Nayanthara

சென்னை: அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நடிகை நயன்தாரா ஹைத்ராபாத் சென்றுள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பு

மீண்டும் படப்பிடிப்பு

அதோடு நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு

கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு

ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விமானத்தில் இருந்து..

விமானத்தில் இருந்து..

இந்நிலையில் படப்பில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா ஹைத்ராபாத் சென்றுள்ளார். விமானத்தில் இருந்து நயன்தாரா இறங்கி நடந்து செல்லும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிழிந்த ஜீன்ஸ்..

கிழிந்த ஜீன்ஸ்..

தொள தொள சட்டை கிழிந்த ஜீன்ஸ் என மாடர்ன் லுக்கில் விமானத்தில் இருந்து இறங்கி ஒய்யாரமாக நடந்து செல்கிறார். கூலர்ஸ் மற்றும் மாஸ்க்குடன் நயன்தாரா நடந்து செல்லும் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ட்ரெண்டிங்கில் நயன்

ட்ரெண்டிங்கில் நயன்

நயன்தாராவின் போட்டோக்களை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள், #Nayanthara என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் டிவிட்டர் ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது.

Recommended Video

Udhaynithi Stalin படத்தில் Aari Arjunan #Article15 | Arunraja Kamaraj, Nivin Pauly
படக்குழு திட்டம்

படக்குழு திட்டம்

அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X