Nayanthara - உம்ம்.. நான் இழந்துவிட்டேன்.. விக்னேஷ் சிவனை பிரிகிறாரா நயன்தாரா.. ரசிகர்கள் எழுப்பும் கேள்வி
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கு பதிவு ஒன்று பல்வேறு கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது.
நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.
தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் தற்போது அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் கலைஞராக நயன் இதில் நடித்திருந்தார். படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது அவர் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
நிம்மதியான நயன்: அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார். அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கும் அவர் அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். சமீபத்தில்கூட தனது இரண்டு மகன்களில் ஒரு மகனை கையில் ஏந்தியபடி இருந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
அன்ஃபாலோ செய்தாரா நயன்: இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் விரைவில் இரண்டு பேரும் பிரியவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மை இல்லை என்று ஒருதரப்பினர் கூறினர். மேலும் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயனின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
எல்லாம் போச்சு: அவர் புகைப்படம் பகிர்ந்ததை அடுத்து விக்னேஷ் சிவனும் - நயனும் பிரிவதற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் அது உணர்த்துவதாக நம்பப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில், "உம்ம.. நான் இழந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விக்னேஷ் சிவனை நயன் பிரிவது உறுதியாகிவிட்டதா. அதைத்தான் அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிடுகிறாரா என்று ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











