Nayanthara - ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் நயன்தாரா.. யப்பா வேற லெவல் அழகு
சென்னை: Nayanthara (நயன்தாரா)நயன் தாரா பத்திரிகை ஒன்றுக்காக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் . அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஜெயம் ரவியுடன் இறைவன் படத்திலும், மண்ணாங்கட்டி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் பெற்றாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தீராத ஆர்வத்துடன் இருக்கிறார். அவருக்கு விக்னேஷ் சிவனும் முழுக்க முழுக்க சப்போர்ட்டாக இருக்கிறார்.
இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொடர்ந்து அவருக்கு ஹிந்தி வாய்ப்புகள் கிடைக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்த படம்: அதன்படி நயனுக்கு அடுத்தும் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அதில் முன்னணி ஹீரோக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தையும் இப்போது போய்க்கொண்டிருப்பதாக ஒரு தகவல் அடிபடுகிறது. எனவே ஹிந்தியில் அவர் நினைத்த மாதிரியே பிஸியாக தொடங்கியிருக்கிறார்.
ஃபோட்டோஷூட்: இந்நிலையில் நயன் தாரா Elle என்ற ஆங்கில பத்திரிகைக்காக ஃபோட்டோஷூட் ஒன்று நடத்தி போஸ் கொடுத்திருக்கிறார். அதில் அவர் விதவிதமான ஆடைகள் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் நயனுக்கு அழகும் கவர்ச்சியும் போகல என்று கமெண்ட்ஸ் செய்து அதை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











