Don't Miss!
- News
தூண்டிலில் "நிர்வாண" பெண்கள்.. யாரந்த பிரபலம்.. போலீசுக்கே தண்ணி காட்டிய "ஹைடெக்" புரோக்கர்.. பகீர்
- Sports
அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ப்பா.. புசுபுசுன்னு ஆளே மாறிய நயன்தாரா.. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க இப்படியொரு போட்டோவா?
சென்னை: நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன நயன்தாரா இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என அசந்து போய் பார்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சினிமா பிரபலங்கள் சூழ இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.
திருமணமான 4 மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளுக்கு அம்மா ஆகிவிட்டார் நயன்தாரா என விக்னேஷ் சிவன் போட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா.. ட்ரெயிலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

2 குழந்தை
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இந்த ஆண்டு இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் அதில் நடித்த நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் ஆன நிலையில், உடனடியாக 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. எப்புர்ரா என ரசிகர்கள் மீம் போட்டு கேட்க, வாடகைத்தாய் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது.

6 வருஷத்துக்கு முன்பே
பின்னர், 6 வருஷத்துக்கு முன்பே பதிவு திருமணம் செய்து வாழ்ந்து வருகிறோம். அனைவரும் அறியும் வகையில் தான் இந்த ஆண்டு திருமணம் செய்தோம் என்றும் வாடகைத் தாய் விவகாரத்தில் அனைத்து விஷயங்களும் சட்டப்படியே நடைபெற்றதாக நயன்தாரா தரப்பு விளக்கம் கொடுத்த நிலையில், சுகாதாரத்துறையும் அதே போல மீடியாக்களுக்கு விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நயன்தாராவா இது
சமீபத்தில் உடல் எடை ரொம்பவே மோசமாக மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு எலும்புக்கூடு போல மாறிவிட்டார் நயன்தாரா என ஒரு புகைப்படத்தை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், அது பழைய போட்டோ என்பதை தெளிவுப்படுத்தவும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அதிரடியாக நயனின் புதிய போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.

கிழிந்த ஜீன்ஸ்
தற்போது வெளியாகி உள்ள புகைப்படத்தில் நடிகை நயன்தாரா கிழிந்த ஜீன்ஸ் அணிந்து பார்க்கவே வேற மாதிரி வித்தியாசமாக காட்சி அளிப்பதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்னதான் ஆச்சு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். முகத்திற்கு ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது காஸ்மெடிக்ஸ் சர்ஜரி செய்துள்ளாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

கம்பெனியின் பிறந்தநாள்
சினிமாவை தாண்டி டீ கடை, லிப் பாம் கம்பெனி என ஏகப்பட்ட பிசினஸ்களை நடத்தி வருகிறார் நயன்தாரா. அவரது அழகு சாதன நிறுவனமான லிப் பாம் கம்பெனியின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கடந்த டிசம்பர் 11ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது டிரெண்டாகி வருகின்றன.

கோல்டும் காலி
இந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் 65 கோடி வரை வசூல் செய்து பாஸ் மார்க் வாங்கி விட்டது. ஆனால், அதன் பின்னர் நயன்தாரா நடிப்பில் வெளியான ஓ2, காட்ஃபாதர் மற்றும் அல்போன்ஸ் புத்திரனின் கோல்டு படங்கள் படு ஃபிளாப் ஆகி நயன்தாராவுக்கு இந்த ஆண்டு பேரதிர்ச்சி கொடுத்துள்ளன.

கனெக்ட் காப்பாற்றுமா
கடைசியாக இந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நிச்சயம் இந்த படம் நயன்தாராவுக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.