நயன்தாராவிற்கு ஹிட் கிடைக்குமா? - திருவோணத்தில் வெளியாகும் லவ் ஆக்சன் ட்ராமா... -

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அடுத்த ஒரு ஹிட் கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த தொடர் தோல்விகள், போட்டி என துவண்டு போயிருக்கும் நயன்தாராவிற்கு ஹிட் கொடுக்க வேண்டுமே என்ற வேகம் எழுந்துள்ளது. நிவின்பாலியுடன் இணைந்து நடித்துள்ள லவ் ஆக்சன் டிராமா படம் திருஓணத்திருநாளில் ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பெருமைக்குரியவர் நயன்தாரா. பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் நயன்தாரா. ஐயாவில் அறிமுகமான அவருக்கு அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் அமைந்தன என்றாலும் சீதாவாக நடிக்கும் படம்தான் கடைசிப்படம் என்று சொல்லி சூட்டிங்கில் அழுதார். அப்புறம் நடந்த விசயம்தான் ஊரறிந்த விசயம்.

தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்ட் ஆரம்பமானது. பல படங்கள் ஹிட் அடித்தன. சம்பளமும் கூடியது. ரசிகர்களும் கொண்டாடினர். கடந்த 10 ஆண்டுகாலமாக பல நடிகைகள் வந்தாலும் நயன்தாரா இடத்தை பிடிக்க முடியவில்லை. இப்பொழுது ஜோதிகா, திரிஷா என நயன்தாராவிற்கு போட்டி அதிகமாகிவிட்டது.

நயன்தாராவிற்கு போட்டி

நயன்தாராவிற்கு போட்டி

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த நயன்தாராவிற்கு போட்டியாக இப்போது திரிஷாவும் ஜோதிகாவும் வந்து விட்டனர்.
நயன்தாரா சமீபத்தில் நடித்த ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் என மூன்று படங்களும் சரியாக போகவில்லை. உடனடியாக ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் நயன்தாரா.

மலையாளப்படத்தில் நயன்தாரா

மலையாளப்படத்தில் நயன்தாரா

இந்த நிலையில் நயன்தாரா தற்போது மலையாளத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லவ் ஆக்சன் டிராமா என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் எப்படியும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

நயன்தாராவிற்கு முக்கியத்துவம்

நயன்தாராவிற்கு முக்கியத்துவம்

பிரபல கதாசிரியர் மற்றும் நடிகர் சீனிவாசன் எழுதி நடித்த வடக்கு நோக்கி எந்திரம் என்கிற ஹிட் படத்தின் நவீன ரீமேக் ஆகத்தான் இந்த படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் நாயகனாக நடிக்கும் நிவின்பாலியை விட அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவிற்கு இந்த படத்தில் நிறைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

லவ் ஆக்சன் டிராமா

லவ் ஆக்சன் டிராமா

தொடர் தோல்விகளால் சற்றே மனம் துவண்டு இருக்கும் நயன்தாரா அடுத்ததாக லவ் ஆக்சன் ட்ராமா படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வரும் திருஓணம் பண்டிகையில் இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் போஸ்டர் ரிலீஸ் ஆனது அதில் அழகிய நயன்தாரா ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

திருஓணம் திருவிழா

திருஓணம் திருவிழா

ஓணம் என்றாலே கேரளாவில் மிக பெரிய திருவிழா தான். நயன்தாராவுக்கு இந்த படமும் ஒரு திருவிழாவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை சொல்கிறோம். இந்த படம் தவிர மிகப்பெரிய படங்களான சிரஞ்சீவி உடன் நடிக்கும் சயிரா நரசிம்ம ரெட்டி, ரஜினி உடன் நடிக்கும் தர்பார் படங்களும் நயன்தாரா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X