பக்காவா பிளான் போட்ட நயன்தாரா..குழந்தை பிறப்புக்கு பின்னால் இருக்கும் ரகசியம்!
சென்னை : நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் அப்பா, அம்மாவாகி விட்டதாக நேற்று இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்து இருந்தனர்.
இந்த தகவல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி, பட்டிதொட்டி எங்கும் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்தது பற்றித்தான் பேச்சாக உள்ளது.
பலர் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் சிலர், நயன்தாராவின் மாஸ்டர் பிளானை கவனித்து அதை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

நயன்தாரா திருமணம்
நட்சத்திர ஜோடிகளான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 6 வருஷமா லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த இவர்கள் கடந்த ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் 10க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேதமந்திரம் ஓத திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இரண்டாவது ஹனிமூன்
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா கணவருடன் திருப்பதிக்கு சென்றார். அதுமட்டும் இல்லாமல் கேரளாவில் உள்ள குலதேவ கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். திருமண வேண்டுதல்களை எல்லாம் முடித்துவிட்டு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். அதன் பிறகு ஜவான் படப்பிடிப்புக்காக இந்தியா வந்த அவர் ஷூட்டிங்கை முடிந்துவிட்டு மீண்டும் பிரான்ஸ், துபாய் என இரண்டாவது முறை ஹனிமூன் சென்றனர்.

இரட்டை ஆண் குழந்தை
இதையடுத்து,நயன்தாரா விரைவில் நல்ல செய்தி சொல்லுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், விக்னேஷ் சிவன், நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

விளக்கம் தரவேண்டும்
திருமணமான நான்கே மாதத்தில் வாடகத்தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள காரணம் என்ன என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாடகைத்தான் விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ள நிலையில், விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்று ஊரக மருத்துவ இயக்குநரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நயனின் பக்கா பிளான்
இப்படி பல விதமாக பிரச்சனை போய் கொண்டு இருக்க, ஒரு சில ரசிகர்கள் நயன்தாராவின் மாஸ்டர் பிளானை கவனித்து அதை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர். அதாவது நயன்தாராவின் திருமண தினம் ஜூன் 9ந் தேதி, நயன்தாராவின் பிறந்தநாள் நவம்பர் 18ஆம் தேதி, அதை கூட்டினால் எண் 9 வரும். அதே போல் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் செப்டம்பர் 18, அதை கூட்டினாலும் 9 வரும். இதனால், குழந்தைகளையும் அதே 9ந் தேதியே அதாவது அக்டோபர் 9ந் தேதி பிறக்க வேண்டும் என நயன்தாரா மாஸ்டர் பிளான் போட்டுள்ளார் என ஒரு அறிய விஷயத்தை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











