இதுக்கு மேல என்ன டவுட்டு.. வலிமை பட தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா!
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வரும் போனி கபூருடன் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்த நடிகர் அஜித் குமார், மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கவுள்ளார்.
வலிமை படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், போனி கபூருடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் வலிமை படத்தில் நயன்தாராதான் நாயகியா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
நான்கு முறை
பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் என இதுவரை நடிகர் அஜித்துடன் நயன்தாரா நான்கு முறை இணைந்து நடித்துள்ளார். இந்த நான்கில் மூன்று படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தில் மீண்டும் அஜித்துடன் நயன்தாரா ஐந்தாவது முறையாக இணைவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஏன் தாமதம்
வலிமை படத்திற்கு பூஜை போட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகின்ற நிலையில், அதன் படப்பிடிப்பு இன்னமும் துவங்காததற்கு என்ன காரணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், அதற்கான ஃபிட்னஸுக்காகவும், படத்திற்கான லொக்கேஷன் தேடும் பணிகளுக்காகவும் கால தாமதம் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார்
ராஜா ராணி படத்தின் மூலம் கம்பேக் ஆன நயன்தாரா, மாயா, டோரா, கோலமாவு கோகிலா, அறம், ஐரா என தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய்யுடன் பிகில், ரஜினியுடன் தர்பார் என மீண்டும் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ்நாட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் வரும் நவம்பர் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக காதலன் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவில் உள்ள மான்ஹாட்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு தான் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரது மகள் குஷி கபூருடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்துள்ளனர். அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் நயன்தாரா!


Click it and Unblock the Notifications











