Nayanthara: அக்கட தேசத்தில் அட்டனன்ஸ் போடும் நயன்தாரா.. விஜய் உடன் மோத பக்கா பிளான்.. தேதி குறிச்சாச்சு
ஹைதராபாத்: நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகையாக உள்ளார். இந்தியில் ஷாருக்கான் உடன் இந்தியில் இவர் நடித்த ஜவான் படத்தின் மூலம் இவருக்கு இந்தியிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்தியில் படங்கள் எதுவும் அமையவில்லை. இப்படியான நிலையில் நயன் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் என்றுதான் கூறவேண்டும்.
நயன் ஒரு கட்டத்திற்கு மேல், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில் பல படங்கள் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களாகவும் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளாகவும் உள்ளன. தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்கிறார்.
இது இல்லாமல் மேலும் பல படங்களில் கதை கேட்டுக் கொண்டு உள்ளார். சினிமா மட்டும் இல்லாமல், நயன் தனது குடும்பத்தையும் மிக சிறப்பாக கையாண்டு வருகிறார். அண்மையில் கூட தனது மகன்களுடன் அன்னையர் தினம் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை நயனின் கணவர் மற்றும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கினர்.
சிரஞ்சீவி: இந்நிலையில் நயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை செம ஜாலியாக வெளியிட்டுள்ளார். படக்குழுவுடன் இணைந்து நயன் வெளியிட்டுள்ள வீடியோவில் நயன் செம கூலாக தெலுங்கு பேசுகிறார். தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 157வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் அனில் ரவிபிடி இயக்குகிறார். இந்த படத்தை அடுத்த ஆண்டு அதாவது 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு பொங்கலுக்கு இயக்குநர் அனில் ரவி புடி இயக்கத்தில் வெளியான சங்கராந்திக்கு ஒஸ்துனாம் படம் வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்த படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சௌத்ரி கதாநாயகிகளாகவும் நடித்தார்கள்.

படக்குழு: இந்நிலையில் இவரது இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் கதையை படித்த நயன், செம எண்டர்டைனிங்கான கதை என்று கூறியுள்ளார். இது மட்டும் இல்லாமல் படத்தின் இயக்குநர் அனில் ரவி புடியுடன் இணைந்து கொண்டு, அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் ரசிகர்கள் அவரை வெல்கம் பேக் என்று கூறி வருகிறார்கள்.
தெலுங்கில் கம்பேக்: நயன் தெலுங்கில் கிட்டத்தட்ட தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடங்குகிறார் என்றுதான் கூறவேண்டும். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள நயன் திட்டமிட்ட போது தெலுங்கு படமான ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் நடித்தார். இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் அவர் கண்ணீர் சிந்தி அழுதார். அதன் பின்னர், பிரபுதேவாவுடனான திருமணம் நின்று போனதால், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

விஜய்: விக்னேஷ் சிவன் உடனான திருமணத்திற்குப் பின்னர், இவர்களின் இரட்டைக் குழந்தைகளை பார்த்துக் கொள்ள, சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இப்படி இருக்கும்போது, தற்போது தமிழ், மலையாளம் என இரண்டிலும் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நயன், தற்போது தெலுங்கிலும் தொடங்கியுள்ளார். மேலும் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளதால், விஜய்யின் ஜன நாயகன் படத்தோடு இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் இது ஜன நாயகன் படத்தின் தெலுங்கு வசூலை பாதிக்கலாம் என்றும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











