Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நெஞ்சம் பதறுகிறது.. நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது.. எஸ்பிபி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்!
சென்னை: பாடகர் எஸ்.பி.பிக்கு நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது என்று கூறியுள்ளார்.
Recommended Video
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) நேற்று மரணமடைந்தார்.
பாடும் நிலா பாலு என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அவர் மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. டிவிட்டரில் உருக்கம்!

தாமரைப்பாக்கம்
அவர் உடல் காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நடிகர் விஜய்
அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர் விஜய், அர்ஜூன் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகை நயன்தாரா
பலர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். நடிகை நயன்தாராவும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி நம்மை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும் காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும்.

நம்ப மறுக்கிறது
நீங்கள் இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்கள் ஆளுமை அப்படி.

ஆறுதல் செய்தி
நீண்டகாலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும் உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது. இவ்வாறு அந்த அறிக்கையில் நயன்தாரா கூறியுள்ளார்.