Nayanthara: "ஸ்வீட் எடு கொண்டாடு..” மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்-விக்கி: ட்ரெண்டாகும் வீடியோ
மலேசியா: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் இறைவன் படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நயன்தாரா தனது மகன்களின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்.
மலேசியாவில் கிராண்டாக கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
மகன்களின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான நயன், தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்திலும் நடித்துவிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா ஸ்டாராக மாஸ்
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்கியுடன் நயனுக்கு காதல் ஏற்பட, 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதனையடுத்து வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. நயன் - விக்கி இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது ஆரம்பத்தில் சர்ச்சையானது. பின்னர் உரிய ஆவணங்களை சமர்பித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில தினங்களாக தனது மகன்களின் போட்டோவை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஷேர் செய்து வருகின்றனர். ஓணம் பண்டிகையை மகன்களுடன் கொண்டாடிய நயன், தற்போது மலேசியாவில் ஓய்வெடுத்து வருகிறார். அங்கே தங்களது மகன்களின் பிறந்தநாளை நயனும் விக்கியும் கிராண்டாக கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரம்மாண்டமான டவர் கேக், விதவிதமான ஸ்வீட்ஸ், ஐஸ் க்ரீம்ஸ், கிஃப்ட்ஸ் என உயிர் ருத்ரோ நீல், உலக் தெய்வக் ஆகியோரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இருதினங்களுக்கு முன்னர் நயனும் விக்கியும் மலேசியாவின் பிரபலமான ட்வின் டவர் முன்பு தனது மகன்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர். அதே உற்சாகத்துடன் தற்போது பிறந்தநாளும் கொண்டாடியுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நயன் - விக்கியின் மகன்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. முன்னதாக ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்திருந்த நயன்தாராவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











