Nayanthara: அன்னையர் தினம்... நயன்தாராவுக்கு வாழ்த்து சொன்ன விக்கி... வேலையை தொடங்கிய நெட்டிசன்கள்

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

நானும் ரௌடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்த இந்த ஜோடி, கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அதேவேகத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களுக்கு அம்மாவானார் நயன்தாரா.

இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

 Nayanthara: Netizens are trolling Vignesh Shivan who wished Nayanthara on Mothers Day

நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து: கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தமிழிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தனது மகன்களை முத்தமிடும் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள விக்கி, உலகின் சிறந்த அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து என கேப்ஷன் கொடுத்துள்ளார். விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதேநேரம் விக்னேஷ் சிவனின் இந்த போஸ்ட்டைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது வேலையை தொடங்கிவிட்டனர்.

பெற்றெடுத்த அன்னை என்பதற்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒரு நபரை அன்னையர் தினத்தன்று ப்ரோமோட் பண்ண வெட்கமாக இல்லையா என கேட்டுள்ளனர். இதுபோல் மேலும் பல கமெண்ட்ஸ்களை போட்டு விக்னேஷ் சிவனையும் நயன்தாராவையும் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக பல வருடங்களாக காதலித்து வந்த விக்கியும் நயனும் கடந்தாண்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் திருமணம் செய்து கொண்டனர்.

 Nayanthara: Netizens are trolling Vignesh Shivan who wished Nayanthara on Mothers Day

மேலும், திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் குழந்தையும் பெற்றுக்கொண்டது இந்த தம்பதி. இது மிகப்பெரிய சர்ச்சையானதால் தமிழ்நாடு அரசு தரப்பில் விசாரணையும் நடைபெற்றது. பின்னர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை நயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து தங்களது இரட்டை மகன்களின் பெயர்களையும் அவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு மகனுக்கு உயிர் ருத்ரேனில் என் சிவன் என்றும், மற்றொரு மகனுக்கு உலக தெய்வேக் என் சிவன் எனவும் பெயர் சூட்டினர். விக்கி - நயனின் இரட்டை மக்ன்களின் இந்த வித்தியாசமான பெயர்களையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X