நயன்தாரா சோறுபோட வேணாம்.. கல்யாணத்த பார்க்கக்கூடவா அனுமதிக்க கூடாது.. ரசிகர்கள் வருத்தம்!

சென்னை: விஜயகாந்த் முதல் சூர்யா வரை ரசிகர்களை மறக்காமல் அழைத்து விருந்து வைத்து திருமணம் நடத்தியுள்ளனர். ஆனால் சோறு போட வேண்டாம் கல்யாணத்தை கூடவா பார்க்கக்கூடாது என ரசிகர்கள் கேட்கின்றனர்.

விஜயகாந்த், அஜித், விஜய் என அனைவரும் ரசிகர்களை உறவுகளாக கருதி அவர்கள் முன் திருமணம் செய்து விருந்து வைத்தனர்.

Recommended Video

பிரம்மாண்டமாக நடைபெற்ற Nayanthara – Vignesh Shivan திருமணம்! #Celebrity | Filmibeat Tamil

திருமண பந்தத்தில் உறவுகளுடன் ரசிகர்களையும் உறவாக மதித்தனர். ஆனால் நயன்தாரா திருமண நிகழ்வை கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர்.

விஜயகாந்த் திருமணம்

விஜயகாந்த் திருமணம்

1990 ஜனவரி 31ம் தேதி விஜயகாந்த் திருமணம் நடந்தது. திமுக தலைவர், தமிழக முதல்வர் தலைமையில் கருணாநிதி தாலியை எடுத்துக்கொடுக்க திருமணம் நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அழைத்து உணவளித்தார். மதுரை முழுவதும் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

விஜய் வைத்த விருந்து

விஜய் வைத்த விருந்து

1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு 25 அன்று நடிகர் விஜய் சங்கீதாவை திருமணம் செய்தார். விஜய் திருமணம் குறித்து சந்திரசேகர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார், அதில் "விஜய் திருமணத்திற்கு நாங்கள் 15 ஆயிரம் ரசிகர்கள் மட்டும் கூப்பிட்டு விருந்து வைத்ததாக கூறி இருக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லை. நாங்கள் விஜய் திருமணத்தின்போது 55 ஆயிரம் ரசிகர்களை வரவைத்து நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட விருந்து வைத்தோம். ரசிகர்கள் முன் விஜய்-சங்கீதா மாலை மாற்றிக்கொண்டனர் என்று சொல்லியிருந்தார்.

அஜித் – ஷாலினி திருமணம்

அஜித் – ஷாலினி திருமணம்

1999ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த அஜித்-ஷாலினி காதல் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்தை பெற்று திருமணம் செய்துக் கொண்டார்கள். அஜித்-ஷாலினி திருமணம் கடந்த 2000வது ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடந்தது. ரசிகர்கள் முன்னிலையில் விருந்து வைத்து கொண்டாடினார் அஜித்.

சூர்யா – ஜோதிகா

சூர்யா – ஜோதிகா

இதேபோல் புகழின் உச்சியில் இருந்த போது நடிகர் சூர்யா ஜோதிகாவை காதலித்த நீண்ட போராட்டத்திற்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. ஏராளமான விஐபிக்கள், ரசிகர்கள் திருமணத்தில் கலந்துக்கொண்டனர். காதல் திருமணம் செய்த உச்ச நட்சத்திரங்கள் யாரும் தனது ரசிகர்களை மறக்காமல் திருமண விழாவுக்கு அழைத்து திருமணம் செய்தனர். தன்னை உச்சத்தில் ஏற்றி வைத்த ரசிகர்களை விஜயகாந்தோ, அஜித்தோ, விஜய்யோ, சூர்யாவோ மறக்கவில்லை. அவர்களை தங்கள் உறவுகள் போல் பாவித்தனர்.

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இதுவரை யாருக்கும் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் வாழ்த்து மழையில், சமூக வலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் நடக்கிறது. ஆனால் ரசிகர்களுக்கு அதைக்காணக்கூட அனுமதி இல்லை. சோறு போட வேண்டாம், கல்யாணத்தை பார்க்கக்கூடவா அனுமதி இல்லை, அதையும் ஓடிடியில் பணம் கட்டித்தான் பார்க்கணுமா? என்ற வருத்ததை சிலர் பகிர்ந்தும் வருகிறார்கள்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் யாரும் காண முடியாத அளவுக்கு மூடி திரையிடப்பட்ட ஒரு 5 நட்சத்திர விடுதியில் நடக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் திருமண நிகழ்ச்சியை முழுதுமாக கவர் செய்து தனது தளத்தில் வெளியிட பெரும் தொகையை பேசியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X