Exclusive 'நயன் எப்படி அதற்கு சம்மதித்தார் தெரியுமா'.... ரகசியத்தை உடைத்த ஐரா இயக்குனர்!

இரட்டை வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா நிறைய மெனக்கெட்டிருப்பதாக ஐரா படத்தின் இயக்குனர் சர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

'நயன் எப்படி அதற்கு சம்மதித்தார் தெரியுமா'... ரகசியத்தை உடைத்த ஐரா இயக்குனர்!- வீடியோ

சென்னை: நயன்தாராவிடன் முதலில் கதை சொன்ன போது இரட்டை வேடம் பற்றி யோசிக்கவில்லை என ஐரா படத்தின் இயக்குனர் சர்ஜுன் தெரிவித்துள்ளார்.

பெரும் விவாதங்களையும், சர்சையையும் ஏற்படுத்திய லக்ஷ்மி குறும்படத்தை இயக்கியவர் சர்ஜுன். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.

அந்த படத்தை தொடர்ந்து சர்ஜுன் அடுத்து இயக்கியுள்ள திரைப்படம் ஐரா. நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் 28ம் தேதி ரிலீசாகிறது.

படம் குறித்து சர்ஜுனிடம் பேசியதில் இருந்து...

உணர்வுப்பூர்வமான திகில் படம்

உணர்வுப்பூர்வமான திகில் படம்

"இது ஒரு திகில் படம். அதற்கு தேவையான அனைத்து விஷயங்களும் படத்தில் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி படத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் இருக்கும். பவானி கதாபாத்திம் அறிமுகமான பிறகு எமோஷனலான காட்சிகள் நிறைய இருக்கும்.

முததில் சொன்ன கதை

முததில் சொன்ன கதை

நயன்தாராவிடம் முதலில் கதை சொன்ன போது படத்தில் இரட்டை வேடம் இல்லை. கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகு, பவானி கதாபாத்திரம் மிக வலுவாக இருந்தது. இதையடுத்து தான் நயன்தாராவிடம் சென்று பவானி ரோலையும் நீங்களே செய்தால் நன்றாக இருக்கும் என கூறினேன்.

பவானியின் தோற்றம்

பவானியின் தோற்றம்

ஆனால் அந்த தோலுக்காக தோற்றத்தை மாற்ற வேண்டியது கட்டாயம். இதனால் தனது ரசிகர்கள் இதனை ஏற்பார்களா என நயன்தாரா முதலில் யோசித்தார். உடனே அவர் ஓகே சொல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து தான் சம்மதம் தெரிவித்தார். அவரது தோற்றம் எப்படி இருக்கும் என்பதை டிசைன் செய்து காட்டினேன். பிறகு முழு திருப்தியாக நடித்துக்கொடுத்தார்.

சவாலான படப்பிடிப்பு

சவாலான படப்பிடிப்பு

நயன்தாரா ரசிகர்களை இந்த படம் நிச்சயம் திருப்திப்படுத்தும். பொள்ளாச்சியில் ஒரு வீட்டில் வைத்து தான் படப்பிடிப்பு நடத்தினோம். அதுபோலவே சென்னையில் ஒரு வீட்டை செட்டுப்போட்டு படமாக்கினோம். இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அந்த காட்சிகள் திருப்தியாக வந்துள்ளன.

மேகதூதம் பாடல்

மேகதூதம் பாடல்

மேகதூதம் பாடலை முதல்முறை கேட்கும் போதே அந்த பாடல் நிச்சயம் பெரிய ஹிட்டாகும் எள எனக்கு தோன்றியது. அதுபோலவே பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறுது.

லக்ஷ்மி குறும்படம்

லக்ஷ்மி குறும்படம்

எனக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது லக்ஷ்மி குறும்படம் தான். அதன் தாக்கம் குறைய இன்னும் ஐந்து வருடங்கள் ஆகும். எனவே அதுபோல் மீண்டும் ஒரு குறும்படம் இயக்க இப்போது எண்ணமில்லை", என சர்ஜுன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X