நயன்தாராவின் ‘O2‘ காப்பியா ?.. உங்க டிசைனே புதுசா இருக்கே.. ஆதங்கப்பட்ட தயாரிப்பாளர்!
சென்னை : நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'O2' படம் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், இத்திரைப்படம் காப்பியா ? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'O2' .
இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

நயன்தாராவின் ‘O2'
'O2' திரைப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனின் தாயாக நடித்து வருகிறார். இப்படத்தின் அட்டகாசமான டிரைலர் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. அந்த டிரைலரில், கொச்சிக்கும் செல்லும் பேருந்து மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. இதில், ஒரு பைப் வழியாக... ப்ளீஸ் ஹெல்ப் என பேருந்துக்குள் இருப்பவர்கள் கத்துகிறார்கள்.

த்ரில்லர் படம்
இந்த பேருந்துக்குள், சுவாச பிரச்சனையுடன் இருக்கும் மகனுடன் சிக்கிக் கொள்கிறார். மேலும், தனது மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டரையும் வைத்து இருக்கிறார். அந்த ஆக்சிஜன் சிலிண்டரை மற்றப்பயணிகள் கைப்பற்ற நினைக்கிறார்கள். விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

காப்பியா ?
இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர் ஒருவர், இந்த படம் காப்பி மாதிரி இருக்கும் என்றும், Sink Hole என்ற கொரியன் படத்தின் கதையை போல இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

உங்க டிசைனே புதுசா இருக்கே
இதற்கு பதிலளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, நம்ம ஊர்ல ஏன் வித்தியாசமா யோசிக்கிறதில்லனு ஆதங்கப்படறாங்கனு, நம்ம ஒரு கதைய தேடி எடுத்துட்டு வந்தா, பல பயலுவ இது எந்த கதையோட ரீமேக்குன்னு கேக்குறாங்க. உங்க டிசைனே புதுசா இருக்கே! Why da? இது ஓர்ஜினல் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











