For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திருமணம் எப்போ செஞ்சிப்பீங்கன்னு கேட்ட டிடி.. லேடி சூப்பர்ஸ்டார் சொன்ன பதிலை பாருங்க!

  |

  சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய் டிவிக்கு நயன்தாரா கொடுத்த பேட்டியை ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்டுகளித்துள்ளனர்.

  மிஸ்சான ரசிகர்கள் காண டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இருக்கு என நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து டிடி நீலகண்டனும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார்.

  ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த திருமணம் எப்போ குறித்த கேள்வியை கேட்க அதற்கு நயன்தாரா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!

  நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கக் கூடாதா? சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை அமலா பால் ட்வீட்!நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கக் கூடாதா? சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை அமலா பால் ட்வீட்!

  நெற்றிக்கண் ரிலீஸ்

  நெற்றிக்கண் ரிலீஸ்

  சுதந்திர தினத்தை முன்னிட்டு இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் லேடி சூப்பர்ஸ்டார் நடித்த நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. விபத்தில் பார்வையை இழக்கும் சிபிஐ அதிகாரி எப்படி பெண்களை கடத்தி சித்ரவதை செய்யும் சைக்கோவை வேட்டையாடுகிறார் என்பதே கதை.

  நடிப்பு அட்டகாசம்

  நடிப்பு அட்டகாசம்

  லேடி சூப்பர்ஸ்டார் என பெயர் எடுத்ததே ஏகப்பட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தித் தான். காதம்பரியாகவே கலக்கி எடுத்தவர் பார்வையற்ற துர்கா எனும் சவாலான கதாபாத்திரம் கிடைத்தால் சும்மாவா விடுவார் தனது நடிப்பால் மிரட்டி எடுத்திருக்கிறார்.

  பழைய கதை

  பழைய கதை

  நயன்தாராவின் நடிப்புக்காகவே படத்தை தாராளமாக பார்க்கலாம். அவள் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் கொரிய படமான பிளைண்ட் திரைப்படத்தை தழுவி இந்த படத்தை தமிழில் உருவாக்கி இருக்கிறார். ஆனால், ஏற்கனவே மிஷ்கினின் சைக்கோ படமும் இதே போன்ற கதை என்பதால் ரசிகர்களுக்கு கதையளவில் பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை.

  விஜய் டிவியில் பேட்டி

  விஜய் டிவியில் பேட்டி

  நடிகை நயன்தாரா இயல்பாகவே ரொம்ப பிரைவேட் பர்சன். அதிகளவில் பேட்டிகளை கொடுக்க மாட்டார். பட புரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டார். எப்போதாவது விருது விழாக்களில் தலை காட்டி வந்த நடிகை நயன்தாரா நெற்றிக்கண் படத்தின் ரிலீசை முன்னிட்டு விஜய் டிவியில் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

  பேட்டி எடுத்த டிடி

  பேட்டி எடுத்த டிடி

  நயன்தாரா பேட்டி என்றதுமே விஜய் டிவி டிடி நீலகண்டனை வரவழைத்து அந்த பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறது. வழக்கம் போல ரசிகர்கள் என்னவெல்லாம் நயனிடம் கேட்க நினைத்தார்களோ அத்தனை கேள்விகளையும் எந்தவொரு சர்ச்சையும் இன்றி சுவாரஸ்யமாக கேட்டு ரசிகர்களை திருப்தி படுத்தி உள்ளார் டிடி.

  நிச்சயம் ஆகிடுச்சு

  நிச்சயம் ஆகிடுச்சு

  மோதிர விரலுடன் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்திற்கு என்ன அர்த்தம் என டிடி கேட்க, எங்க இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என்கிற பரம ரகசியத்தை முதன் முறையாக வெட்க புன்னகையுடன் விஜய் டிவி பேட்டியில் போட்டு உடைத்திருக்கிறார் நயன்தாரா. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என வெகு சிலருக்கு மட்டுமே இது தெரியும் என்றும் கூறியுள்ளார்.

  விக்னேஷ் சிவன் பற்றி

  விக்னேஷ் சிவன் பற்றி

  பொதுவாகவே நடிகைகளின் வாழ்வில் ஒரு ஆண் வந்து விட்டால் அவர்களின் சினிமா வாழ்க்கை தடைபடும் என்று நினைத்து இருந்தேன். ஆனால், விக்னேஷ் சிவன் வந்த பிறகு தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறேன். என்னை தினமும் பூஸ்ட் செய்து வருகிறார் என்றும் ஏகப்பட்ட நற்சான்றுகளை கூறியிருக்கிறார்.

  திருமணம் எப்போ

  திருமணம் எப்போ

  நிச்சயம் ஆகிடுச்சுன்னு சொன்ன நயன்தாரா திருமணம் எப்போது என்று எப்போ சொல்வார் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்காக அந்த கேள்வியையும் டிடி நீலகண்டன் மிஸ் பண்ணாமல் கேட்டு விட அதற்கு நயன்தாரா கூறிய பதில் ரசிகர்களை பெரிதும் அப்செட் பண்ணி இருக்கிறது.

  கல்யாணம் ஆனா சொல்றேன்

  கல்யாணம் ஆனா சொல்றேன்

  திருமணம் செஞ்சிக்குவீங்களா? இல்லை லிவ்வின் டுகெதராக வாழப் போறீங்களா என டிடி கேட்க, திருமணம் ஆனதும் நிச்சயம் அறிவிப்பேன். ஆனால், திருமணத்தையும் அனைவருக்கும் சொல்லி செய்ய மாட்டேன். இதுக்கு மேல எதையும் கேட்காத டிடி என்கிற ரேஞ்சுக்கு நயன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

  ஏகப்பட்ட படங்கள்

  ஏகப்பட்ட படங்கள்

  தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த, வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரனின் பாட்டு, பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் என ஏகப்பட்ட படத்தில் நயன்தாரா கமீட் ஆகி இருக்கிறார். அதையெல்லாம் முடித்து விட்டு பொறுமையாக திருமணத்தை செய்துக் கொள்வாரா இல்லை திருமணம் முடிஞ்சிடுச்சுன்னு காத்துவாக்குல ரெண்டு காதல் பட புரமோஷனின் போது சொல்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

  English summary
  Lady Superstar Nayanthara opens up about her wedding details with DD Neelakandan in Vijay Tv special interview on Independence Day.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X