இந்தியன் 2... முதன்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நயன்தாரா!
இந்தியன் 2ம் பாகத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றியடைந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கமல் அறிவித்தார்.

தனது அரசியல் பயணத்திற்கு இப்படம் மிகச் சிறந்த அடித்தளமாக அமையும் என கமல் நம்புகிறார்.
ரஜினியின் '2.0' பட வேலைகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்திற்கான வேலைகளிலும் ஒருபக்கம் ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்கான தொழில்நுட்ப கலைஞர்களை அவர் தேர்வு செய்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தின் இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், பட வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதிபடுத்துகின்றன.
தமிழ் சினிமாவில் கமலைத் தவிர பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில், இந்தியன் 2 மூலம் அவர் கமலுடன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல், அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











