காஷ்மோராவில் கார்த்தியின் ஜோடியான நயன்தாரா
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் 'காஷ்மோரா' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து 'கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. லட்சுமிமேனன் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்கி வருகிறார்.
இப்படத்தைத் தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கார்த்தி.

இரட்டை வேடத்தில் கார்த்தி
காஷ்மோராவில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பை 'கொம்பன்' முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

கார்த்தி - நயன்தாரா
இந்த படத்தில் முதலில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதில் கார்த்தி ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து உறுதியான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

காமெடிக்கு வடிவேலு
இந்த படத்தில் வடிவேலு மீண்டும் காமெடியில் கலக்க புது அவதாரம் எடுக்கவிருக்கின்றார். அவருடன் காமெடி செய்ய பசுபதியும் இணைகிறார்.

டிசம்பரில் படப்பிடிப்பு
ஆக்சன் மற்றும் காமெடி திரைக்கதையாக அமைந்துள்ள இந்த திரைப்படம் கார்த்திக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் இயக்குனர் கோகுல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

சூர்யா உடன் நயன்தாரா
நயன்தாரா தற்போது சூர்யா உடன் மாஸ் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனியொருவன், அட்லி இயக்கும் படத்தில் விஜய் உடன் ஜோடி என பிஸியாக இருக்கும் நயன்தாரா கார்த்தியுடன் முதன் முறையாக ஜோடி சேரப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











