முதன்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா... "ஐரா"வின் டபுள் ட்ரீட்!

ஐரா படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, ஐரா படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

"அறம்" படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களை இயக்கியவரும், "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடும்" திரைப்படத்தை இயக்கிய சர்ஜூன் கதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைக்க, சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு செய்கிறார். "அவள்" படத்தின் கலை இயக்குனர் சிவசங்கர் அரங்கு அமைக்கும் இந்த படத்தில், நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜே.பி. ஆகியோரும் நடித்துள்ளனர்.

முதல்முறையாக இரட்டை வேடம்

முதல்முறையாக இரட்டை வேடம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. திரை வர்த்தகத்தில் மட்டுமன்றி ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து தன்னுடைய ஆளுமையை செலுத்தி வரும் நயன்தாரா "ஐரா" படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஐரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஒரு கெட்டப்பில் தன்னுடைய இயல்பான தோற்றத்தில் இருக்கும் நயன்தாரா, மற்றொரு கெட்டப்பில் கறுப்பு நிறத்தில் சோகமாக இருக்கிறார். இது திகில் படம் என்பதால், நயன்தாராவின் மற்றொரு கெட்டப் பேயாக இருக்கும் என உணர்த்துகிறது.

நயன்தாரா அந்தஸ்து உயரும்

நயன்தாரா அந்தஸ்து உயரும்

இப்படம் குறித்து தெரிவித்த தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்." நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

ரசிகர்களை கவரும்

ரசிகர்களை கவரும்

சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது. இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார்.

ஐரா என்றால் யானை

ஐரா என்றால் யானை

"ஐரா" என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு திகில் படமாகும்" என்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X