இது என்னடா கொடுமை..அம்மாவா நடிக்கிறாரா நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !

சென்னை : அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் கசிந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படம் விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்பொழுது முழுவீச்சுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லாக் டவுன் காரணமாக அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதையில் நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்து ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்பியிலும் முன்னிலையில்

டிஆர்பியிலும் முன்னிலையில்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா சமீபத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து, வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் எப்போதெல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

முக்கிய பிரபலங்கள்

முக்கிய பிரபலங்கள்

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்த நிலையில், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கியமான பிரபலங்கள் பலரும் இணைந்திருக்கின்றனர் என்ற செய்தி வெளியாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

நயன்தாராவின் கதாபாத்திரம்

நயன்தாராவின் கதாபாத்திரம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக உள்ள நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் மீனா என 4 கதாநாயகிகள் ஒரே திரைப்படத்தில் இணைந்துள்ளதால் அவர்களின் கதாபாத்திரம் என்னவென்று கணிக்க முடியாமல் ரசிகர்கள் தவித்து வந்த நிலையில், தற்பொழுது நயன்தாராவின் கதாபாத்திரம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

அவ்வாறு கசிந்துள்ள தகவலின் படி நயன்தாரா கீர்த்தி சுரேஷிற்கு அம்மாவாக அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த செய்தியை கேட்ட நயன்தாராவின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாதி ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட நிலையில், லாக்டவுன் காரணமாக இரண்டாம் பாதியின் படப்பிடிப்பு இன்னும் தொடங்க முடியாமல் இருக்கின்றது.

காட்டுத் தீ போல பரவி

காட்டுத் தீ போல பரவி

நயன்தாரா கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடிக்கிறார் என்கிற செய்தியை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதிர்ச்சியில் ரசிகர்கள்

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் உருவாகிவரும் மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்து வாக்குல இரண்டு காதல் போன்ற திரைப்படங்கள் விரைவில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்க உள்ள நிலையில், இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களை குழப்பம் அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X