ராம் சரணுக்காக கொள்கையை தளர்த்தும் நயன்தாரா?

By Siva

Recommended Video

ராம் சரணுக்காக தனது கொள்கையை அடஜஸ்ட் செய்யும் நயன்தாரா- வீடியோ

ஹைதராபாத்: சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்துகிறார் என்று கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு நயன்தாராவுக்கு சிறப்பாக துவங்கியுள்ளது. அவர் அஜித்துடன் சேர்ந்து நடித்த விஸ்வாசம் படம் ஹிட்டாகியுள்ளது. அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தெலுங்கில் நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான சயீரா நரசிம்ம ரெட்டி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நயன்தாரா

நயன்தாரா

சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. இந்த படத்திற்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்க்கப் போகிறாராம்.

விளம்பரம்

விளம்பரம்

நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே விளம்பர நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று கறாராக சொல்லிவிடுவார். இந்நிலையில் அவர் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராம் சரண்

ராம் சரண்

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை தயாரித்துள்ள நடிகர் ராம் சரண் நயன்தாராவை சந்தித்து தயவு செய்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தாராம். நயன் படத்தை விளம்பரப்படுத்தினால் அது பெரிய பிளஸ்ஸாக இருக்கும் என்று ராம் சரண் நம்புகிறார். அவருக்காக நயன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறாராம்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, தமன்னா, ஹூமா குரேஷி, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X