Nayanthara :மகன்களின் முழு பெயரை அறிவித்த நயன்தாரா.. க்யூட்டா இருக்கே! ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை : நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பாலிவுட்டில் ஜவான் மற்றும் தமிழில் இறைவன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டில் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்துக் கொண்டனர். மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்திய அளவில் திரைத்துறை பிரபலங்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளுக்கும் இவர்கள் பெற்றோர் ஆனதாக சமூக வலைதளங்கள் மூலமாக அறிவித்திருந்தனர். இந்த நிகழ்வு பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகையாக கடந்த 10 ஆண்டுகளை கடந்து இருந்து வருகிறார். அடுத்தடுத்து ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகர் ஷாருக்கான் -இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தில் நயன்தாரா லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சூட்டிங்கில் பங்கேற்பதற்காக தொடர்ந்து மும்பையில் அவர் தன்னுடைய குடும்பத்துடன் தங்கினார்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படம் இன்னும் இரு மாதங்களில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழிலும் ஜெயம் ரவியுடன் இறைவன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா, அடுத்ததாக அவரது தனிஒருவன் 2 படத்திலும் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரதீப் ரங்கநாதனுடனும் நயன்தாரா ஜோடி சேரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்
கடந்த ஆண்டில் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு மிகவும் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடைபெற்றது. ரெசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர்கள் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சில வாரங்களிலேயே தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்
இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்த நிலையில், தாங்கள் 5 வருடங்களுக்கு முன்னதாகவே பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாகவும் அவர்கள் அறிவித்தனர். இந்த விவகாரம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. தற்போது இந்த சர்ச்சைகளில் இருந்து அவர்கள் வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். அஜித் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள விக்னேஷ் சிவன், தன்னுடைய அடுத்தப்படத்தின் அறிவிப்பை விரைவில் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைகளுடன் நயன் -விக்கி ஜோடி
தங்களின் குழந்தைகளின் முகத்தை காட்ட விருப்பப்படாவிட்டாலும் அவ்வப்போது வெளியில் செல்லும்போது தங்களின் குழந்தைகளை கைகளில் அழகாக தூக்கிக் கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செல்வது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் மும்பை விமான நிலையத்திலும் இவர்கள் தங்களது குழந்தைகளுடன் தென்பட்டனர். இந்நிலையில் இந்தக் குழந்தைகளின் பெயர்களை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

குழந்தைகளின் பெயர்கள்
முன்னதாக தங்கனின் குழந்தைகளின் பெயர்கள் உயிர் மற்றும் உலகம் என்று விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்தப் பெயர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துக் கொண்ட நயன்தாரா, குழந்தைகளின் முழுப் பெயர்களை அறிவித்துள்ளார். உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வேக் என் சிவன் என நயன்தாரா தெரிவித்துள்ளார். இதில் என் என்பது நயன்தாராவை குறிக்கும்வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











