கதை பிடிச்சுப்போச்சாம்... மீண்டும் இணைகிறது நயன்தாரா- ஆர்.ஜே.பாலாஜி டீம்!
Recommended Video
சென்னை: மூக்குத்தி அம்மன் படத்துக்குப் பிறகும் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா டீம் மீண்டும் இணைகிறது.
காமெடி நடிகரான ஆர்.ஜே.பாலாஜி, கதை எழுதி நடித்த படம் எல்கேஜி. இதை அடுத்து அவர் கதை திரைக்கதை எழுதி, சரவணனுடன் இயக்கும் படம், மூக்குத்தி அம்மன். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
ஏற்கனவே நானும் ரவுடிதான், வேலைக்காரன் படங்களில் நயன்தாராவுடன் நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து இந்தப் படத்திலும் இணைந்துள்ளார். இதில் மவுலி, ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் சமீபத்தில் கன்னியாகுமரியில் தொடங்கியது.

இந்நிலையில், நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார்.
நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் ஆர்.ஜே.பாலாஜியும் நண்பர்கள். விக்னேஷிடம் பாலாஜி சொன்ன கதை அவருக்குப் பிடித்ததால், அவரே இந்தப் படத்தை தயாரிப்பதாக உறுதியளித்திருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இதில் நயன்தாரா இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்கிறார்கள். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாத தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா, இப்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார். அடுத்து, விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











