'தளபதி 63' : 9 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் நடிக்கும் நயன்தாரா
Recommended Video

சென்னை: தளபதி 63 படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ள படம் தளபதி 63. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டது.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நயன்தாரா
தளபதி 63 படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நீண்ட காலம் கழித்து விஜய், நயன்தாராவை பெரியதிரையில் ஜோடியாக பார்க்க ரசிகர்களை போன்றே தானும் ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிரபுதேவா
பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் விஜய், நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். விஜய்யின் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நயன்தாரா நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி
தளபதி 63 படத்தில் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. நயன்தாராவுக்கு மரத்தை சுற்றி வந்து டான்ஸ் ஆடிவிட்டு செல்லும் கதாபாத்திரமாக இல்லாமல் வெயிட்டான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி படத்தில் கண்டிப்பாக இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயின் யாரோ?
அட்லி
அட்லியின் முதல் படமான ராஜா ராணியின் ஹீரோயின் நயன்தாரா தான். அந்த படத்தில் அவர் ரெஜினாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அட்லி மீண்டும் அவரை தன் படத்தில் நடிக்க வைக்கிறார். நயன்தாரா மீண்டும் தனது படத்தில் நடிப்பதில் அட்லி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











