நயன்தாராவின் அடுத்த மலையாள படம்.. பிரேமம் பட இயக்குநரின் ‘பாட்டு’ படத்தில் ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடி!

திருவனந்தபுரம்: பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படமான 'பாட்டு' படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார்.

இசையை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக ஃபகத் ஃபாசில் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரம்

நேரம்

சின்ன சின்ன ஷார்ட் ஃபிலிம்களை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரன், நேரம் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். நிவின் பாலி, நஸ்ரியா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான அந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிரேமம்

பிரேமம்

கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபஸ்டியன் நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம், மலையாளத்தில் மட்டுமே வெளியான போதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளாக

5 ஆண்டுகளாக

2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல படங்களை இயக்குவார் அல்போன்ஸ் புத்திரன் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக புதுப்பட அறிவிப்பு எதையுமே அவர் வெளியிடவில்லை. சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் எடிட்டிங் பணிகள் மற்றும் இன்னும் பிற சினிமா பணிகளில் ஈடுபட்டு வந்த அல்போன்ஸ் சமீபத்தில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

என்ன டைட்டில்?

என்ன டைட்டில்?

பிரேமம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவுள்ள படத்திற்கு ‘பாட்டு' என்ற டைட்டிலை வைத்துள்ளார். மேலும், இசையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு இசையையும் அல்போன்ஸ் புத்திரனே இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்காகத் தான் இந்த 5 ஆண்டுகள் தவமாம்.

ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் நடிகை நஸ்ரியாவின் கணவருமான ஃபகத் ஃபாசில் தான் பாட்டு படத்தின் நாயகன் என்கிற அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்னதாக அல்போன்ஸ் புத்திரன் அறிவித்து இருந்தார். நேரம் மற்றும் பிரேமம் படத்தில் ஹீரோவாக நிவின் பாலி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தான் நாயகி

நயன்தாரா தான் நாயகி

இந்நிலையில், ஃபகத் ஃபாசிலுக்கு ஜோடியாக பாட்டு படத்தில் நடிக்கப் போவது யார் என்கிற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் அல்போன்ஸ் புத்திரனின் ‘பாட்டு' படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்கிற அட்டகாசமான அறிவிப்பு தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

விஜே டயானா

விஜே டயானா

கேராளவில் பிறந்து வளர்ந்து பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றிய டயானா மரியம் குரியன் எனும் நயன்தாரா தமிழில் ஐயா படத்தில் அறிமுகமாகி லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ளார். சமீப காலமாக மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்து கலக்கி வருகிறார் நயன்தாரா. மம்மூட்டியுடன் பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌ஷன் டிராமா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த நயன்தாரா மீண்டும் ஒரு மலையாள திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஏற்கனவே ஃபகத்துடன்

ஏற்கனவே ஃபகத்துடன்

தமிழில் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், இருவரும் ஜோடியாக அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க உள்ளது மலையாள ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X