அறிவிப்பிற்கு முன்பே இப்படி ஒரு மாஸா...லேடி சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா

சென்னை : தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. மலையாளத்தில் மனசினக்கரே என்ற படத்தின் முலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நயன்தாரா.

தமிழில் ஹரி இயக்கிய ஐயா படத்தின் முலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். இதுவரை 70 க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார்.

லேடி சுப்பர் ஸ்டார் என அனைவராலும் பாராட்டப்படும் நயன்தாரா, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் முலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தயாரிப்பாளராக பல படங்களையும் தயாரித்து வருகிறார்.

Nayantharas 75th movie announcement will come tomorrow

நானும் ரெளடி தான் படத்தில் நடித்த போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கிய நயன்தாரா, கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் கோல்டு, இந்தியில் ஜவான், தமிழில் இறைவன், கனெக்ட், தெலுங்கில் காட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் 75வது படம் பற்றிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டைமண்ட் ஸ்டாரில் என் 75 என குறிப்பிட்டு, நாளை காலை 11 மணிக்கு அறிவிப்பு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு தான் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாக நயன்தாரா ஓ2 படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்க போகும் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்திலும் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.இது தவிர பல படங்களிலும் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தற்போது நயன்தாராவின் 75வது படம் என சொல்லப்படுவதால் இதுவும் பெண்களை மையமாகக் கொண்ட படமாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே அறம் உள்ளிட்ட பல பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்கள். இதனால் இதுவும் அடுத்த மாஸ் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு வெளியாகும் முதல் படம் அறிவிப்பு இது தான் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X