Don't Miss!
- News
‛111’ போதாது.. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 6 புதிய பொறுப்பாளர்கள்.. டப் கொடுக்கும் எடப்பாடி-லிஸ்ட்
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Lifestyle
சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு...
- Technology
உஷார்.! 5G ஆபத்தானதா? இவ்வளவு மறைமுக பாதிப்பு இருக்கிறதா? IPS அதிகாரிகள் சொன்ன உண்மை.!
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நயன்தாராவின் அறம் பாக்ஸ் ஆபீஸ்.... ஏற்ற இறக்கத்துடன், பட் கோயிங் ஸ்டெடி!
Recommended Video

அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் படம் அறம். ஆணாதிக்கம் ஆதிக்கம் செலுத்தும் கோடம்பாக்கத்தில் அதனை முறியடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது அறம் திரைப்படம்.
அறம் பிறழாத மாவட்ட ஆட்சியர் மக்களுக்காக 100% நேர்மையுடன் நடக்கிற போது, அங்கே அரசியல்வாதிகளிடம் மண்டி போட்டு மக்கள் நலனை பலி கொடுப்பதற்கு எதிராக போராட முடியும் என்பதை ஹீரோயிசம் இல்லாத கோபி நயினார் திரைக்கதையில் நயன்தாரா வாழ்ந்திருக்கிறார்.

குத்து பாட்டும், ஹீரோயிசமும் நிரம்பிய வழக்கமான தமிழ் சினிமாவைhd பார்த்து அலுத்து போன ரசிகன் மக்கள் அரசியல் பேசிய அறம் படம் பார்த்து அதிர்ந்து போனான். நயன்தாரா நடித்த படங்களில் ஐயா, சந்திரமுகி, டோரா படங்களுக்கு பின் குடும்பங்கள் கூட்டமாக வந்து பார்த்த படம் அறம் என்கிறது தியேட்டர் வட்டாரம். அதனால் வசூல் மழை பொழியவில்லை என்றாலும் அடாத மழையிலும் அறம் பார்க்க குடும்பங்கள் தியேட்டருக்கு வந்தது நல்ல சினிமாவுக்கான ஆதரவு தளம் குறையவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது..
அறம் நவம்பர் 10ல் ரீலீஸ் செய்யப்பட்ட போது குறைவான தியேட்டர்களே தென் மாவட்டங்களில் கிடைத்த்தன. ஒருவாரம் கழிந்த நிலையில், இனி எதிர்வரும் நாட்களில் தியேட்டர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னை, கோவை, ஏரியாவிலும், செங்கல்பட்டு ஏரியா மால்களிலும் நகர்புற தியேட்டர்களிலும் அறம் வசூல் அதிகம். பகல் காட்சிகளில் மிக குறைவான வசூலைச் சந்திக்கிற அறம் மாலை, இரவு காட்சிகளில் 75 சதவீத கூட்டத்துடன் ஓடுகிறது. புறநகர், கிராமம் சார்ந்த தியேட்டர்களில் அறம் வசூல் குறைவாக உள்ளதையும் மறுப்பதற்கில்லை.
அதேபோல முன்பதிவெல்லாம் ஓஹோவென்று இல்லை. அந்தந்த காட்சிக்கு அப்போதைக்கப்போது வரும் கூட்டம் மட்டும்தான். பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் குறைவான தியேட்டர்களில் நியாயமான டிக்கட் விலையில் முதல் வார முடிவில் தமிழகத்தில் ரூ 5 கோடி ரூபாய் மொத்த வசூல் அறம் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இது மிகப் பெரிய வசூல் என்கிறது பாக்ஸ் ஆபீஸ்!