மக்களுக்காக ஒரு கலெக்டர் நடத்தும் போராட்டம்..!
கோபி நயினார் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் நாயகியாக நடித்துள்ள படம் அறம். வரும் நவம்பர் 10-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது அறம். ஒரு பெரிய ஹீரோவின் படத்துக்கான முக்கியத்துவத்துடன் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
படத்தைப் பார்த்த சென்சார் குழு, இன்றைக்கு தேவையான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகப் பாராட்டி யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. சுயநல பெருமுதலாளிகளிடமிருந்து குழந்தைத் தொழிலாளர்களைக் காப்பதும், விவசாயிகளை அழிவிலிருந்து மீட்பதும்தான் படத்தின் மையக் கதை.
மெர்சலை விட அதிகமாக படத்தில் அரசியல் வசனங்களுக்கு பஞ்சமில்லை என்கிறது படக்குழு. மக்களுக்காக ஒரு மாவட்ட ஆட்சியர் நடத்தும் போராட்டம் இது என்பதால் படம் முழுக்க இதுபோன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளனவாம்.
அப்ப விளம்பரச் செலவு மிச்சம்... எல்லாத்தையும் 'அவங்க' பாத்துப்பாங்க!


Click it and Unblock the Notifications











