நயன்தாராவுக்கு மகனாக நடித்த ரித்து ராக்ஸ்.. ஆக்ஸிஜன் இன்றி தவிக்கும் பயணிகள்.. ஓ2 டிரைலர் ரிலீஸ்!
சென்னை: இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் விரைவில் நேரடியாக ஓடிடி ரிலீசாக வரவுள்ள ஓ2 (O2) திரைப்படத்தின் மெர்சலான டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஒரு பஸ் விபத்து படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
அறம் படத்தில் ஒரு ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை மாட்டிக் கொள்வது போல இங்கே ஆழத்தில் ஒரு பேருந்தில் பயணிக்கும் பலர் மாட்டிக் கொள்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி நாயகி
மூக்குத்தி அம்மான், நெற்றிக்கண் என தொடர்ந்து நயன்தாராவின் உமன் சென்ட்ரிக் படங்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், அடுத்ததாக நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள ஓ2 திரைப்படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷை தொடர்ந்து நயன்தாராவும் ஓடிடி நாயகி உள்ளார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரித்து ராக்ஸ்
ரித்து ராக்ஸ் யூடியூப் சேனலில் கலக்கி வரும் குழந்தை ரித்து தான் இந்த படத்தில் நயன்தாராவுக்கு மகனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. மூச்சு விடுவதில் சிரமம் எனும் வியாதியுடன் இருக்கும் தனது மகனை கனிவுடன் கவனித்து வருகிறார் நயன்தாரா.
ஓ2 டிரைலர் ரிலீஸ்
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் (விக்னேஷ் சிவன் இல்லை) நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள வித்தியாசமான த்ரில்லர் படமான ஓ2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. எங்கேயும் எப்போதும் படத்தையும் அறம் படத்தையும் மிக்ஸ் செய்து எடுத்தது போல ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் எப்படி தவிக்கின்றனர், எப்படி தவிக்கின்றனர் என்கிற கதையுடன் படம் உருவாகி இருப்பதை டிரைலர் உண்ர்த்துகிறது.

நயன்தாரா முகத்தில் மாற்றம்
இந்த படத்தை சமீபத்தில் எடுத்தது போல தெரியவில்லை. காட்சிக்கு காட்சி நயன்தாராவின் முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் இயல்பாகவே தெரிகின்றன. கன்டினியூட்டி மிஸ்சிங், மோசமான சிஜி எல்லாம் படத்திற்கு நெகட்டிவிட்டியாக மாறாத வண்ணம் திரைக்கதை த்ரில்லிங்காக இருந்தால் ஓ2 தப்பிக்கும். வரும் ஜூன் 17ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாகிறது.

திருமணமும் ஓடிடியில்
திருப்பதியில் நடைபெறவிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் அந்த திருமணத்தை வீடியோ எடுத்து நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஜூன் 9ம் தேதி இந்த நட்சத்திர ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications