நயன்தாராவின் ’கனெக்ட்’ பட இயக்குநருக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் யார் தெரியுமா?
சென்னை: மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வின் சரவணன் திருமணம் அச்சரப்பாக்கத்தில் உள்ள ஒரு கோயிலில் எளிமையான முறையில் நடந்துள்ளது.
மாயா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து 'கனெக்ட்' எனும் படத்தை இயக்கி வருகிறார் அஸ்வின் சரவணன்.
இந்நிலையில், தன்னுடன் படங்களில் கதையாசிரியராக பணியாற்றி வந்த காவ்யா ராம்குமார் என்பவரை கரம் பிடித்துள்ளார்.

அஸ்வின் சரவணன் திருமணம்
இயக்குநர் அஸ்வின் சரவணன் தன்னுடன் படங்களில் பணியாற்றி வரும் கதையாசிரியர் காவ்யா ராம்குமாரை காதலித்து வந்த நிலையில், சென்னை மற்றும் பாண்டிச்சேரி இடையே உள்ள அச்சரப்பாக்கத்தில் உள்ள கோயில் ஒன்றில் எளிமையான முறையில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டார்.

பேனாவும் பேப்பரும்
இயக்குநர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பேப்பரும் பேனாவுடன் தான் இந்த உறவு ஆரம்பித்தது. ஆனால், இப்போது அழகிய கவிதையாக திருமண வாழ்வில் வந்து முடிந்திருக்கிறது என தனது திருமண புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை அள்ளி வருகிறார்.

நயன்தாரா பட இயக்குநர்
ஹாரர் படங்களை இயக்குவதில் படு கெட்டிக்காரர் இயக்குநர் அஸ்வின் சரவணன். கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா மற்றும் பிக் பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான மாயா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில், தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வருகிறார்.

கேம் ஓவர்
கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகை டாப்சி நடிப்பில் வெளியான கேம் ஓவர் திரைப்படத்தையும் இயக்கியது அஸ்வின் சரவணன் தான். அந்த படத்திற்கு கதையாசிரியராக பணியாற்றிய காவ்யா ராம்குமாருடன் கம்ஃபோர்ட் ஜோன் ஏற்பட்ட நிலையில், இருவருக்குமே காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கனெக்ட் படத்திலும்
தொடர்ந்து கனெக்ட் படத்திலும் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். நயன்தாரா, சத்யராஜ் நடிப்பில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணனின் திருமண செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நயன்தாரா வாழ்த்து
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கனெக்ட் பட இயக்குநருக்கும் அவரது மனைவிக்கும் ஸ்பெஷல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை கூறியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











