சில்ல்ல்ல்ல்ல்.... நயன்தாராவோட கூல் ரியாக்ஷனை பாருங்க... ரசிகர்கள் மனசும் சில்தான்
ஐதராபாத் : நடிகை நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டாராக தன்னை கோலிவுட்டில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர்.
தன்னுடைய கேரக்டருக்கான பர்பெக்ஷனை சிறப்பாக திரையில் கொண்டு வருவதற்காக மெனக்கெட்டு நடிக்கக்கூடியவர்.
இவர் தெலுங்கு படப்பிடிப்பின்போது பாடல் காட்சிக்காக ஆற்றின் நடுவில் கொண்டு விடப்பட அவர் செய் ரியாக்ஷனின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சிறப்பான படங்கள்
தான் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் மற்றும் அதற்கான மெனக்கெடல்கள் உள்ளிட்டவற்றால் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாகாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவரது நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலீசுக்கு தயார்
இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் சூப்பர்ஸ்டாருடன் அண்ணாத்தே, விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் ஆகிய படங்கள் ரிலீசுக்காக தயாராக உள்ளன. இவை அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.
ஜில் என கத்திய நயன்
இந்நிலையில் தெலுங்கில் வெங்கடேசுடன் இவர் நடித்துள்ள பாபு பங்காரம் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. ரக்க ரக்க பாடல் காட்சியின்போது ஆற்றின் நடுவில் நயன்தாரா இறக்கி விடப்பட அவர், ஜில் என்று கத்த அந்த இடமே அல்லோல கல்லோல படுகிறது.

விக்னேஷ் சிவன் உறுதி
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இவர் தற்போது இணைந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் இணைந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இருவரின் திருமணம் குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பப்பட விரைவில் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











