மேடம், ஹனிமூன் எங்க போக போறீங்க...வெட்கத்துடன் நயன்தாரா கொடுத்த ரிப்ளை

சென்னை : திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட போதிலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பற்றிய பேச்சுக்கள், அவர்களின் செயல்பாடுகள் என அவர்கள் செய்யும் ஒவ்வொன்றும் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Pressmeet After Marriage #Celebrity | Filmibeat Tamil

ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணத்தை முடித்து விட்டு, அப்படியே திருப்பதி போய் விட்டார்கள் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் முடித்த பிறகு கல்யாண உற்சவம், சுப்ரபாத சேவை ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

திருப்பதியில் திருமணம் செய்ய நினைத்து முடியாமல் போனதால், திருமணம் முடிந்ததும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆனால் அங்கு நடத்திய போட்டோஷுட்டின் போது செருப்பு அணிய தடை செய்யப்பட்ட பகுதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் செருப்பு அணிந்து நடமாடிய போட்டோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பினார்.

மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்த நயன்

மஞ்சள் சேலையில் மங்களகரமாக வந்த நயன்

இதைத் தொடர்ந்து இன்று சென்னை வந்து செய்தியாளர்களை சந்தித்தனர். திருமணத்திற்கு பிறகு ஜோடியாக வந்து செய்தியாளர்களை சந்தித்து, தங்களுக்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி கூறி விட்டு சென்றனர். காதல் கணவர் விக்னேஷ் சிவனின் கைகளை பிடித்தபடி, மஞ்சள் சேலையில் மங்களகரமாக, நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி, தங்க நகைகள் என முழுக்க முழுக்க தமிழ் பாரம்பரிய குடும்ப தலைவியாக மாறி இருந்தார் நயன்தாரா.

நன்றி தெரிவித்த நயன் - விக்கி

நன்றி தெரிவித்த நயன் - விக்கி

நயன்தாராவின் முகத்தில் முன்பு இருந்ததை விட பொலிவும், அழகும் கூடி இருப்பதை அனைவரையும் கவனித்து கேட்க துவங்கி விட்டனர். நயன்தாராவை முதல் முறையாக சந்தித்து கதை சொன்ன இடத்திலேயே திருமணத்திற்கு பிந்தைய பிரஸ் மீட்டை வைத்ததாக விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்தார். விக்னேஷ் சிவன் பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்டு நயன்தாராவும் நன்றி தெரிவித்தார்.

ஹனிமூன் எங்க போக போறீங்க

ஹனிமூன் எங்க போக போறீங்க

நயன்தாரா பேசிக் கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர் ஒருவர் கூட்டத்தில் இருந்து, மேடம்...ஹனிமூன் எங்க போக போறீங்க என கேட்டார். இதற்கு வெட்கப்பட்டு விக்னேஷ் சிவனை பார்த்து சிரித்தார் நயன்தாரா. வெட்கப்பட்ட படி நயன்தாரா சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தது அனைவரையும் கவர்ந்தது.

இது தான் நயன் - விக்கி பிளானா

இது தான் நயன் - விக்கி பிளானா

ஆனால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஹனிமூன் எங்கும் செல்லவில்லை என கூறப்படுறது. வரிசையாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி, இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்து வருவதால் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா தற்போது மலையாளத்தில் கோல்டு, பாட்டு, இந்தியில் ஜவான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்க போகும் ஏகே 62 படத்திலும் நடிக்க அவரிடம் பேசப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவனும் அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 62 படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X